காமெடி சேனல்ல வேலை பார்க்குற நண்பர் ஒருத்தர்கிட்ட இன்னைக்கு பேசிக்கிட்டு இருந்தேன்.
”காமெடி ஷோஸ் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு” கேட்டேன்…
அதுக்கு அவரு, ”தேர்தல் சமயத்துல எந்த காமெடியும் அவ்வளவா எடுக்கிறதில்ல.. அண்ணாமலை, செல்லூர் ராஜூ, டிஆர்பி ராஜான்னு அரசியல் கட்சிக்காரங்களோட பிரஸ் மீட் காமெடி தான் சோஷியல் மீடியாவுல டிரெண்டிங்ல இருக்கு….அதையே டிவியில போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கோம்ன்னு” சொன்னாப்ல,,,,
”அதுவும் நல்ல முடிவு தான்… காமெடி சேனலுக்கே டஃப் கொடுக்குற அளவுக்கு நம்ம கட்சிக்காரங்க வளர்ந்துட்டாங்களேன்னு வருத்தப்படுறதா இல்ல சந்தோஷப்படுதான்னே தெரியலன்னு” அவருக்கிட்ட சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க ?
மத்திய அரசு வெள்ள நிவாரணம் தான் தரல்ல
அட்லீஸ்ட் ‘வெயில் நிவாரணமா’ எல்லாருக்கும் குச்சி ஐஸ் ஆவது தருவாங்களா ன்னு கேக்குறாம்ப்பா…
ரஹீம் கஸ்ஸாலி
அவனை ஏன் அடிக்கறீங்க?
அருணாச்சல பிரதேசத்து டூர் போகணும். விசா எடுக்க சைனா தூதரகம் போகணுமான்னு கேட்கறான்…
Mannar & company™
காதலானாலும் தேர்தலானாலும்
இரண்டிலும் யாரோ ஒருவர் ஏமாற வேண்டும்!
செங்காந்தள்
நான் குற்றவாளி இல்லைன்னு நிரூபிச்சிட்டேன் மாமா.
எங்க நீதிமன்றத்திலேயா மாப்பிள்ளை?
தேர்தல் பத்திரம் வாங்கி மாமா.
— ச ப் பா ணி (@manipmp) April 3, 2024
balebalu
வீட்டோட மாப்பிள்ளையும்
பொது தேர்தலோடு வரும் இடை தேர்தலும் ஒன்னு
‘ஸ்பெஷல் கவனிப்பு’ இருக்காது
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
‘என்ன செய்யட்டும்..?’ என்று ஆலோசனை கேட்பவரிடம் ‘உன் இஷ்டம்..’ என்று சொல்வதை விட பெரிய வன்முறை வேறு எதுவும் இல்லை.
mohanram.ko
5 வருஷம் முன்னாடி பார்த்தது.. இப்ப நல்லா வளர்ந்துட்டார். மாமா
உங்க ப்ரெண்ட்டா மாப்ள
இல்லை மாமா, வேட்பாளர்…
மித்ரன் ????.????????????.????????????
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கும் போரை நிறுத்தும் வலிமை கொண்டவர் மோடி ~ சரத்குமார்
இவ்ளோ பேசுறியே மொத சுப்ரமணிய சாமி பேசுறத நிறுத்தி காட்ட சொல்லு..?!
மயக்குநன்
எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்!- சீமான்.
அப்ப… ‘மிளகு ரசம்’ செய்வீங்களா பாஸ்..?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
மோடியின் ’25’ வாஷிங் மெஷின்… துவைத்து தொங்க போட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்!
Comments are closed.