இன்னைக்கு டீக்கடைக்கு போகும்போது, இந்த மெட்ரோ வேலையால ’டேக் டைவர்ஸன்’னு சொல்லி சொல்லி 4 தெருவ சுத்த உட்டுட்டாங்க. சரின்னு ஒருவழியா வந்து ‘கன்னித்தீவு’ படிக்கலாம்னு பேப்பர புரட்டுனா ‘கச்சத்தீவு’ வெவகாரத்த பத்தி வெலாவரியா போட்டிருந்தாங்க…
அது பறிபோனதுக்கு காரணம் காங்கிரஸ், திமுகதான்னு பாஜக குற்றம் சாட்டுது… இந்த 10 வருஷமா நீங்க தானே ஆட்சில இருந்தீங்க… அப்போ என்ன பண்ணீங்கனு? திமுக, காங்கிரஸ் திரும்பி கேட்குது.
சரி எதுக்கு இப்போ கச்சத்தீவு வெவகாரம் போகுது என்ன விஷயம்னு படிக்கலாம்னு பாத்தா….
மேல இருக்குற அருணாச்சல பிரதேஷ இது என்னோட ஏரியானு ஒரு 30 இடத்துக்கு சீனாக்காரன் பேரு வச்சி அறிவிச்சிட்டானு மொபைல நோட்டிபிகேஷன் வருது..
அப்போது தான் புரிஞ்சது… மேலே பாத்து யாரும் கேள்வி கேட்டுற கூடாதுனு கீழ இருக்குற ’கச்சத்தீவ’ இப்போ மேல கொண்டு வர்றாங்க போல….
அது சரி இந்த டைவர்ஸனுக்கு போலீஸ் காலைல காட்டுன ’டைவர்ஷன்’ எவ்ளவோ பரவால்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
கச்சத்தீவை மீட்க நான் பாடுபடுவேன்- ஓபிஎஸ்
மற்ற நான்கு ஓ பி எஸ் வேட்பாளர்கள் நவ் :
நாங்களும் கச்ச தேவை மீட்போம்
Kirachand
அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே நாங்கள்தான்! – அன்புமணி ராமதாஸ்
இப்ப… பாஜக கூட்டணியில் சேர்ந்து…உங்க உயிரைக் கொடுக்க துணிந்து விட்டதும் நீங்கதானோ?
நெல்லை அண்ணாச்சி
கச்சத்தீவு…விவகாரம்
” வேதனை ” அளிக்கிறது….
but …what about
சீனா ஊடுருவல்…!!!
கடைநிலை ஊழியன்
பொறுமையா இருங்க.. கச்சத்தீவு பிரச்சனைய முடிச்சிட்டு வருவாரு ஜி..
30 இடம் தான.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. அதுவும் இப்ப எலக்சன் ல பிசியா இருக்காரு ஜி..
வசந்த்
வெளிநாட்டில் வேலை செய்கின்றவர்கள் அடிக்கடி சொல்லும் பொய் “இன்னும் ஒரு வருஷம் தான் ” என்பதே..
ச ப் பா ணி
ஆபிஸ்ல இருந்தா அண்டார்டிகாவில் இருக்கிற மாதிரி ஜில்லுனு இருக்கு..
வீட்டுக்கு வந்தா சஹாரா பாலைவனத்தில் சம்மர்க்கு வந்தது மாதிரி தீயா இருக்கு
balebalu
கன்னி தீவுக்கும் கச்ச தீவுக்கும் என்ன வித்தியாசம் அண்ணே ?
அடேய்
தினம் தினம் பேப்பர்ல கதையா வந்தா அது கன்னி தீவு
தேர்தலுக்கு தேர்தல் பழங் கதையா வந்தா அது கச்ச தீவு
ச ப் பா ணி
நல்லாயிருக்கியா
உங்க ஏரியாவுல எதுவும் ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்களா?
#நவீனகால நலன் விசாரிப்புகள்
கோழியின் கிறுக்கல்
‘நான் கோபிக்க மாட்டேன், உண்மையை சொல்லுங்க!’ என்னும் மனைவியின் சொல்,
மீன்பிடி தூண்டிலின் மண்புழு!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
MS Dhoni: தோனிக்கு மீண்டும் காயமா? வெளியான அதிர்ச்சி வீடியோ!
சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு பாதுகாப்பு வேண்டுமா?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!