’ஐபிஎல் மேட்ச் பார்க்க கிரவுண்டுக்கு தான் போக முடியலனு பாத்தா… வீட்ல கூட பாக்க முடியல… எனக்கு வந்த நெலமையா பாத்தியாண்ணே’னு டீக்கடக்கார்ட புலம்பிட்டு இருந்தேன்.
அதுக்கு அவரு… ‘அந்த மேனஜேர் அவ்ளோ வேலையா குடுக்குறானு கேட்டாரு.
’இல்லணே… வீட்டுல பொண்டாட்டி ஒரு பக்கம் உட்காந்துக்கிட்டு சீரியல் பாக்கனும்னு சொல்றா… அப்பா இன்னொரு பக்கத்துல இருந்து எலெக்சன் பிரச்சாரம் பாக்கனும்னு சொல்றாரு… பையன் போகோ டிவி வையினு அழுவுறான்” இதுல நான் எங்குட்டு ஐபிஎல் மேட்ச் பாக்க…”
சரிண்ணே கடையிலயாச்சும் அந்த டிவிய ஆன் பண்ணி மேட்சு போட்டு விடுங்கனு சொன்னா…. அது சும்மா பம்மாத்துக்கு வச்சிருக்கேனு குழந்தையா சிரிக்கிறாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
amudu
சமூக நீதிக்காக போராடிவரும் ஒரே கட்சி பாமக தான். -டாக்டர் ராமதாஸ்.
ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் கட்சின்னும் சொல்லலாம்.
Kirachand
எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் போடும் ஓட்டு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம்! – ஜி.கே.வாசன்
தமிழ்நாட்டில் இவரு எதிர்க்கட்சி தானே?
நெல்லை அண்ணாச்சி
கூட்டம் வராததால் சென்னை புறப்பட்ட பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார்.
பாரத் மாதா கி ஜே…!!!
amudu
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணமில்லை. -நிர்மலா சீத்தாரமன்.
பணமில்லையா… பலமில்லையா..!?
பர்வீன் யூனுஸ்
மக்களவை தேர்தலில் போட்டியிட பணமில்லை – நிர்மலா சீதாராமன் # ‘நிதி’ (இல்லா) அமைச்சர்?
செங்காந்தள்
மக்களவை தேர்தலில் போட்டியிட பணமில்லை – நிர்மலா சீதாராமன்
உங்களிடமே பணம் இல்லாத போது அடித்தட்டு மக்கள் வாங்கும் நிவாரணத் தொகை எப்படி பிச்சை ஆகும்?
ச ப் பா ணி
உணவுப் பிரியர் is a word
சாப்பாட்டு ராமன் is an emotion
மயக்குநன்
அதுல பாருங்க சம்மந்தி… இவரு பழைய பன்னீர்செல்வமா திரும்பி வருவாருன்னு பார்த்தா… புது பன்னீர்செல்வம் அஞ்சாறு பேரை கூடவே கூட்டிட்டு வந்துருக்காரு..!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பாஜக ஆட்சியில் 90% வழக்குகள் எதிர் கட்சியினர் மீது தான்” : கனிமொழி குற்றச்சாட்டு!
சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? : ஸ்டாலின் கேள்வி!