அந்த புண்ணியவானுக்கு போன் போட்ட புண்ணியவான்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

சீமான் எத்தனையோ பாட்டு பாடியிருக்காரு… எத்தனையோ பாடல்களை தன் சினிமாவுல படம் பிடிச்சிருக்காரு. ஆனா இன்னிக்கி போட்ட சிச்சுவேஷன் சாங் உண்மையிலேயே அவருக்கு பொருத்தமானதுதான்.
கரும்பு விவசாயி சின்னம் கெடைக்காம போராடி மைக் சின்னம் கெடைச்சிருக்குனு அவர் கஷ்டப்பட்டு சொல்லும்போது, ‘ரத்தக் கொதிப்பு… ரத்தக் கொதிப்பு…மாமனாருக்கு ரத்தக் கொதிப்பு’னு பின்னாடி ஒரு செல்போன் சத்தம் போட்டுச்சே…
அந்த புண்ணியவானுக்கு போன் போட்ட புண்ணியவான் யாருய்யா… அவனை கண்டா வரச் சொல்லுங்கய்யா… கையோட கூட்டி வாருங்கய்யா… அண்ணன் கையில கெடைச்சே….

நீங்க அப்ட்டேஸ் பாருங்கய்யா…

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

balebalu
ஜோசியரே , குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?
ஓ பன்னீர்செல்வம் ன்னு வெச்சு ராமநாதபுரம் கூட்டிட்டு போங்க
அமோகமா இருப்பான்

நெல்லை அண்ணாச்சி
ஈ….லோகத்திலே ” நியாயமான ” Office
உண்டெங்கில் அது தேர்தல் ஆணையம் தான்… சாரே…!!!

ADVERTISEMENT

ℳsd இதயவன்
பொள பொள னு பொளக்கிறாங்க மாமா
OneFamily னா சும்மாவா மும்பைனா பொளக்க தான் செய்வாங்க மாப்ள
One family ah பொளக்கிறதே மும்பைய தான் மாமா!!
SRHvsMi

Sasikumar J
ஹலோ நேம் சேஞ்ச் பண்ண வந்து இருக்கீங்களா…
ஆமா…என்ன நேம் மாத்த வந்தீங்க…
ஓ பன்னீர்செல்வம்…

balebalu
‘சீப்பை ‘ ஒளித்து வைத்தால் திருமணத்தை தடுக்கலாம் – பழமொழி
‘சின்னத்தை ‘ ஒளித்து வைத்தால் வாக்களிப்பதை தடுக்கலாம் – புதுமொழி

நெல்லை அண்ணாச்சி
தமிழ்நாட்டுக்கு
தாயுள்ளம் கொண்ட மோடிஜியின் “அன்புப்பரிசு”
# புதிதாக 20 சுங்கச்சாவடிகள்..!!

balebalu
மனைவியின் வங்கி கணக்கில் 8 ரூபாய் தான் உள்ளது – ஜெயவர்த்தன்
வங்கிகளின் ‘மினிமம் பேலன்ஸ் ‘ க்கு வந்த சோதனை

வசந்த்
எனக்கு பக்கெட் சின்னம் கொடுங்கள்.. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு!

ஓபிஎஸ்கள் ~
இந்தா எங்களுக்கும் மஞ்சள், பச்சை, கருப்பு, வெள்ளை இந்த 4 கலர்ல பக்கெட் சின்னம் குடு..

கோழியின் கிறுக்கல்!!
மண்டைய பொளக்கிற வெயில்ல போய்,

“சூடா ரெண்டு டீ போடுங்க மாஸ்டர்”ன்னு கேட்டு குடிப்பவர்கள் ‘டீ வெறியர்கள்’!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரீமேக் ஆகும் கமலின் சத்யா?

“ப்ரீத்திக்கு நான் கேரண்டி” : மோடியை விமர்சித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share