’யாருகிட்ட என்ன கேக்குறீங்க ஆபிசர்?’ : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டீக்கடைக்கு போன எடத்துல, டீவில தேர்தல் ஆணையர் சாகு பேட்டி கொடுத்துட்டு இருந்தாரு.

அவரு, ”ஓட்டுக்கு காசு கொடுக்கறவங்கள பொதுமக்கள் வீடியோ அல்லது போட்டோ எடுத்து சி-விஜில் ஆப் மூலமா அனுப்புனா தேர்தல் ஆணையம் அத தடுத்து நடவடிக்கை எடுக்கும்”னு சொல்லிட்டு இருந்தாப்ல.

இதே கேட்ட நமச்சிவாயம் நமட்டு சிரிப்பு சிரிச்சான். அத கவனிச்ச டீக்கடைக்காரரு அவன்ட ‘எதுக்கு சிரிக்குற?’னு கேட்டாரு.

அதுக்கு அவன், ‘நம்மூரு மக்க பணம் கொடுத்தா அத தடுக்கனும்னு பாக்கமாட்டாங்க… அவனுக்கு கொடுக்குறாங்க… எனக்கு கொடுக்கலனு வேணா கோபப்படுவாங்க…

இதுதெரியாம.. இவரு ஆப்பு… நடவடிக்கனு என்னத்தையோ சொல்லிட்டு இருக்காரு”னு சிரிக்குறான். சாகுவையே சாச்சிப்புட்டானப்பா…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
மனைவியை வீட்டுவேலை செய்ய சொல்வது கொடுமையாகாது – டெல்லி உயர்நீதிமன்றம்
#வீட்டு வேலை சொல்றதுக்கு தைரியம் இல்ல ஜட்ஜய்யா…

கோழியின் கிறுக்கல்!!
90ஸ் கிட்ஸ் காதலின் முக்கிய விதி என்னவென்றால்,
தான் காதலிப்பது யாருக்கு வேணா தெரியலாம், ஆனா சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு மட்டும் கண்டிப்பாக தெரியக் கூடாது என்பதே!!

Kirachand
என் அடுத்த திட்டம் “Wed in India”
– மோடிஜி
90-ஸ் kids-க்கும் உண்டா கோப்பால்?

ஜோ
மேடம், அரசியலும் பண்ணனும், கண்டனமும் தெரிவிக்கணும், போராட்டமும் பண்ணனும், ஆனா அதை நோகாம பண்ணனும்…
~ அதுக்கு நீ காங்கிரஸ்லதான் இருக்கணும்

balebalu
ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?
WED IN INDIA திட்டத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா
ஷாரூக்கானும் , அமிதாப் பச்சனும் வந்து டான்ஸ் ஆடுவாங்களா ன்னு கேக்குறாம்ப்பா…

Mr.Ego
ஹெல்மெட் எல்லாம் போட்டு Carefull லா இருந்தவனுக்கு Hairless ஆகிடுச்சி
-அரே ஓ சம்போ

ச ப் பா ணி
குளித்து முடித்து வியர்ப்பதற்குள் வீட்டுக்குள் ஓடிப்போய் ஃபேன் க்கு அடியில் நின்றிடனும்
-Task

mohanram.ko
உன் பையன் சொல்றதை கேட்டயாடி… நாட்டுக்கு பெருமை சேர்க்க, அம்பானி மகனுக்கு நடக்குற திருமணம் மாதிரி இவனுக்கும் நடத்தனுமாம்…

black cat 2
Password மறந்து போகுதுன்னா Ex ஓட பேர password டா வச்சிக்க வேண்டியதுதானே…
அப்படித்தான் வச்சேன்… ஆனா எந்த Ex ஓட பேர வச்சேன்னுதான் இப்ப மறந்து போச்சு…

கோழியின் கிறுக்கல்!
‘ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்?’னு கேட்பாங்க,
‘நீ எங்க விட்டியோ அங்க தான் இருக்கேன்’னு சொன்னாலும் கண்டுக்காம போய்டுவாங்க!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

திமுக, அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு : அடுத்த கட்டம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share