update kumaru March 6-2024
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க தொண்டர்கள் ஆர்வம் காட்டுவதால், விருப்ப மனு அளிக்க காலக்கெடு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் குழு விரைவில் அமைக்கப்படும் – த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட இந்த அறிவிப்பை பேஸ்புக்ல பாத்துட்டு நண்பர்கிட்ட காட்னேன்…
‘நானும் எத்தனையோ பேரை பாத்துருக்கேன்யா… உக்ரைன் அதிபரைவிட உக்கிரமான ஆளா இருப்பாரு போலயே இந்த வாசன்… நாம தான் அலெர்ட்டா இருக்கணும். இல்லேன்னா 40-ஐயும் ‘தட்டி’ தூக்கிருவாரு’னு சீரியசாத்தான் சொன்னாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
அரசு அலுவலகங்களில் ‘லஞ்ச’ புகார் தெரிவிக்க
“கட்டணம் இல்லா ” தொலைபேசி எண்
#முரண்
சப்பாணி
மொபைல் போனினால் வரும் டிப்ரஷனை விட.. மொபைலில் சார்ஜ் இல்லையெனில் வரும் டிப்ரஷன் அதிகம்
Kirachand
140 கோடி மக்களும் என் குடும்பம்! – மோடிஜி
என்னப்பா 140 கோடி இந்திய மக்களுக்கு வந்த சோதனை?
Mannar & company™
செம்ம கூட்டம் மாமா..
மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கா மாப்ள..?!
குணா படம் எடுத்த கொடைக்கானல் ஷுட்டிங் ஸ்பாட்ல மாமா!
#ManjummelBoys
கடைநிலை ஊழியன்
திமிங்கலம் நேத்து நைட் facebook, instagram டவுன் ‘னா இருந்துச்சே.. அப்ப என்ன பண்ணுன..
சரி ஆகுற வர திரும்ப திரும்ப refresh பண்ணி பாத்துடு இருந்தேன் வாத்தியாரே..
Mr.Ego
“பரவாயில்லை பழகிடுச்சி” என்ற வார்த்தைக்குள்…
அடங்கியிருக்கிறது பல ஆசைகளும் கனவுகளும்..!!
ச ப் பா ணி
பேனா,பென்சில் வைப்பதற்கு இயற்கையாகவே கடவுளால் படைக்கப்பட்ட ஸ்டாண்ட் தான் காதோரம்
ℳsd இதயவன்
நாங்கள் கேட்கும் இடங்களை திமுக வழங்கும்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
எதுக்கும் கே.எஸ் அழகிரிகிட்ட அழ ட்ரெயினிங் எடுத்து வைங்க ?!
லிட்டில் கிருஷ்ணா
பெண் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch சொல்லி குடுத்து வளர்க்குற மாதிரி…
பசங்களுக்கு Don’t Touch சொல்லி குடுத்து வளர்க்கனும்…
குருநாதா
உன்னால மட்டும் எப்படிடா இவ்வளவு கஷ்டத்துலயும் சிரிக்க முடியுது
கஷ்டப்பட்டு தான் டா
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இன்டலக்சுவல் ட்வீப்ஸ்:
குணா குகையை பத்தி தமிழ்ல யாராவது படம் எடுக்கலாம்ல..?
குணா படமே தமிழ் படம்தான்டா..
ArulrajArun
கடன் வாங்கி கார் ல போறவன் இல்ல சார் நாங்க,
கடன் இல்லாம கால் நடையா போறவங்க நாங்க – 90s kids உலகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளி நடத்திய நாடகம்… புதுச்சேரியில் நடந்தது என்ன?
update kumaru March 6-2024