டீ குடிச்சிக்கிட்டிருக்கும்போது தம்பி என்னைப் பாத்து, ‘ஏண்ணே… மஞ்சுமேள் பாய்ஸ் பாத்துட்டியா?’னு கேட்டாப்ல. ‘இல்லையே… ஆனா அதைப் பத்திதான் பேசிக்கிட்டே இருக்காங்க… ஷங்கர் பாய்ஸ் மாதிரி இருக்குதா?’னு கேட்டேன்.
அதுக்கு அந்த தம்பி, ‘ஏண்ணே… 25 வருசத்துக்கு முந்தி குணா படத்துல வந்த குகையை வச்சிதாண்ணே இந்த படமே எடுத்துருக்காங்க. மலையாள படமா இருந்தாலும் தமிழ்நாட்ல நல்லா ஓடுது. இதை சாக்கா வச்சி இப்ப குணா படத்தை ரீ ரிலீஸ் பண்ணா நல்லா ஓடும்… இதை கமல்கிட்ட சொல்லணும்’ அப்படின்னாப்ல…
‘கமலே இப்ப தேர்தல் அப்படின்ற குணா குகையிலதான விழுந்திருக்காரு. பாவம் எந்த கூட்டணியில எந்த சீட்டுனு தெரியாம அவரோட அரசியல் தக் லைஃப் போயிட்டிருக்கு’னு சொல்லி அந்தத் தம்பிய அனுப்பிவச்சேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
பேஸ்புக்,ட்விட்டரில் இருந்து வெளியேற நினைக்கிறேன்! – மோடிஜி
என்னப்பா… மீம்ஸ்க்கு வந்த சோதனை?…
கோழியின் கிறுக்கல்!!
SBIல, சாதாரணமாக நூறு ரூபாய் பணம் எடுக்க போனாலே அலைய விடுவாங்க,
இவங்க Electoral Bond details கேட்டா உடனே கொடுத்துடுவாங்களாக்கும்!?
GOVIND
எங்க கேங் கு எல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் ல ஆன மாதிரி ஆகவே ஆகாது…
ஏன் அப்படி.
நாங்க பிளான் மட்டும் தான பண்ணுவோம் போகவே மாட்டோம் ல
கடைநிலை ஊழியன்
எனக்கு பெருசா ஒன்னும் ஆசை சார்..
வருசம்.. வருசம்.. புது iphone மாத்துற அளவுக்கு சம்பாதிக்கனும்..
பரமசிவம் ராமசாமி
கராத்தே,குங்பூ இதையெல்லாம் விட
மிகச்சிறந்த தற்காப்புக்கலை
அச்சச்சோ அப்படியா,!எனக்குத் தெரியாதே! என்பது…
balebalu
நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே ன்னு போட்டுக்க என்பதன்
லேட்டஸ்ட் வெர்சன் தான்
நடுவுல நடுவுல இளையராஜா பாட்டை சேர்த்து படம் பண்ணுறது என்பதும்…
ச ப் பா ணி
முதலில் தேவைன்னு தோணும்,
அப்பறம் தேவையான்னு தோணும்,
அதுக்கப்புறம் தேவையில்லைன்னு தோணும்
-Credit card தான்
தர்மஅடி தர்மலிங்கம்
தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அளித்து வருகிறார்: எல்.முருகன்!
கடைசி வரைக்கும் அந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரலையே.?!
மயக்குநன்
திமுக- காங்கிரஸ் உறவு இனிப்பாகத்தான் இருக்கிறது!- செல்வப்பெருந்தகை.
‘சர்க்கரை வியாதி’ வராம இருந்தா சரி..!
black cat 2
manjummel boys vibe…
நண்பர்கள் எல்லா சேர்ந்து கொடைக்கானல் டூர் போக தயார் ஆயச்சு ,
ஒரே ஒருகுறைதான்
என்ன?
குழிக்குள்ள விழ ஒருத்தனை இனிமே தா ரெடி பண்ணனும்
அனிமல்ஸ் மைண்ட்வாய்ஸ் ~ ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க.. pic.twitter.com/9Z9qstmUgq
— சரவணன். 𝓜 (@saravankavi) March 4, 2024
நெல்லை அண்ணாச்சி
தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க
” ஜூன் 30 ” வரை கால அவகாசம் கோரியது….SBI
தேர்தல் முடியும்வரை தானே ஆபிசர்!
மயக்குநன்
அரசியல் கடமையிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்!- ஜே.பி.நட்டாவுக்கு கவுதம் கம்பீர் வேண்டுகோள்.
‘ரிட்டயர்டு ஹர்ட்’டா பாஸ்..?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
கொரோனா குமார்: சிம்புவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவரா?
திமுக ஆதரவில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: மோடி காட்டம்!