டீ குடிச்சுக்கிட்டே ரிலாக்சா ரீல்ஸ் பாத்துக்கிட்டுருந்தேன். அப்ப திடீர்னு நம்ம நண்பர் தோளைத் தட்டி, ‘ஏண்ணே… எலக்ஷன் டைம் டேபிள் அறிவிச்சிட்டாங்க பாருங்க’ அப்படின்னாப்ல. update kumaru February 23-2024
‘யோவ்… இன்னிக்குதான்யா தமிழ்நாட்ல ஆலோசனையே நடத்தியிருக்காங்க. அதெல்லாம் அறிவிக்க வாய்ப்பே இல்லை’ அப்படினு நான் சொன்னேன்.
உடனே அந்த நண்பர், ‘இங்க பாருங்க வாட்ஸ் அப்ல வந்திருக்கு. வேட்பு மனு தாக்கல் தேதி, தேர்தல் தேதி, வாக்கு எண்ணும் தேதி, புதிய அரசு அமைக்கும் தேதியெல்லாம் போட்டிருக்கு’ அப்படினு சத்தமாவே சொன்னாரு.
நான் சிரிச்சுக்கிட்டே, ‘ஓ… வாட்ஸ் அப் ஆணையமா? அதுலதான் இன்னிக்கு தேர்தல் அறிவிச்சு நாளைக்கு ரிசல்ட்டையே அறிவிச்சுடுவாங்க… போய்யா’னு சொல்லிட்டு டீயை மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சேன்.
இந்த வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி பட்டதாரிகளை என்னதான் பண்றதுன்னே தெரியலையே?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
வேலை கிடைக்காதபோது வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தம்…
வேலை கிடைத்தபிறகு சம்பளம் பத்தவில்லை என்ற வருத்தம்…
ℳsd இதயவன்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சொந்தக் கட்சியால் மட்டுமே தோல்வி அடையப் போகிறார்கள் ~ வானதி சீனிவாசன்
நீங்க கட்சியை வாடகைக்கு எடுத்து தோப்பீங்களா அக்கா ?!
கடைநிலை ஊழியன்
டு மேனேஜர் – எவ்ளோ சம்பளம் அதிகம் குடுத்தாலும் நம்ம கம்பெனி ‘ய விட்டு போக மாட்டேன்..
முதல்ல உனக்கு அதிக சம்பளம் தரேன் ‘னு எந்த கம்பெனி ‘காரன் டா சொன்னான்..
சாணக்கியன்
எண் மண் , என் மக்கள் அண்ணாமலை நடைபயணம் 40 எம்பி க்களை பெற்றுத்தரும் – பாஜக எல் முருகன்
அப்போ ஏன் முருகா நீ நீலகிரியில் நிற்கலை..
balebalu
டைரி என்பது
வாழ்க்கை நினைவுகளை எழுதும் ஒரு பொக்கிஷம் என்பதில் இருந்து
பாஸ்வேர்ட் நினைவில் வைத்துக்கொள்ள எழுதும் ஒரு நோட்டு என்றளவில் மாறி போனது.
கோவிந்தராஜ்
எல்லா பயலுகளும் நீதிபதியா ஆக ஆரம்பிச்சுட்டானுங்க
டக்குனு ஒரு பொது நுழைவுத் தேர்வ போட்ற வேண்டியதுதான்
Kirachand
வேலை கிடைக்காதபோது வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தம்…
வேலை கிடைத்தபிறகு சம்பளம் பத்தவில்லை என்ற வருத்தம்…
Mannar & company™
முதலில் தேவைன்னு தோணும்,
அப்பறம் தேவையான்னு தோணும்,
அதுக்கப்புறம் தேவையில்லைன்னு தோணும்.
இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை!!!
கோழியின் கிறுக்கல்!!
அலாரம் வைத்து எழுந்திருக்க தேவையில்லாத,
ஒரு வாழ்க்கை அமைந்து விட்டால் போதும்!!
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மோடி அட்டாக்… ஃப்ரஷ் ரிப்போர்ட்: அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின்
உக்ரைன் – ரஷ்யா போர் : ’டூப்’ ராணுவ வீரர்களாக சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!