ரயில்வே ஸ்டேஷன்ல வெச்ச மாதிரி இனி ஒவ்வொரு ரேஷன் கடையிலயும் மோடியோட செஃபி பாயின்ட் வைக்கப் போறாங்களாம்… தெரியுமா?’னு நம்ம நண்பர் பேப்பரை படிச்சுக்கிட்டே கேட்டாரு.
நான் டீய குடிச்சுக்கிட்டே, ‘இன்னொரு இடத்துலயும் மோடி செஃல்பி பாயின்ட் வைக்கலாமே?’னு கேட்டேன்.
அவர் உடனே ரொம்ப ஆர்வமாகி, ‘எங்க வைக்கலாம் சொல்லுங்க?’னு கேட்டாரு.
‘கேஸ் சிலிண்டர் புக்கிங் பாயின்ட்லயும் மோடியோட செஃப்பி பாயின்ட் வச்சா மக்கள்கிட்ட இன்னும் நல்லா ரீச் ஆகலாம்’னு சொன்னேன்.
நண்பர் பேப்பர புரட்டி அடுத்த நியூசை படிக்க ஆரம்பிச்சிட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
நெல்லை அண்ணாச்சி
மோடி அரசின் திட்டங்களை
” டப்பிங் ” செய்து வெளியிட்ட திமுகவின் நிதிநிலை அறிக்கை அண்ணாமலை…!!
பிறகென்ன….சந்தோசமா
பாராட்ட வேண்டியதுதானே…!!!
Pablo Escobar
ஏன்டா மணியா.. ஊருக்குள்ள யாராச்சும் டெல்லி விவசாயிகள் போராட்டத்த பத்தி பேசுறான்..?
இல்லீங்ணா.. ஒரு பய பேசலியே..
பேச மாட்டானுங்க.. அதுக்கு தானே அக்பர் சீதா ரெண்டு பேரையும் களத்துல எறக்கி உட்ருக்கோம்..
ச ப் பா ணி
இணையம் வந்த பிறகுதான் பழிவாங்கிறது ஈஸியாச்சு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள்
தர்மஅடி தர்மலிங்கம்
அதிமுக பிரச்னையில ‘குளிர்காய’ விரும்பலை: அண்ணாமலை!
‘வெயில்’ காலம் வந்திடுச்சு போல..?!
balebalu
சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் ராஜினாமா – செய்தி
பரவாயில்லையே மனசாட்சி ன்னு ஒன்னு இருக்கு போல
அதெல்லாம் இல்லைப்பா , இன்னைக்கு திரும்ப வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருது
அன்னிக்கு மாதிரியே திரும்ப விளாசுவாங்க ,அடி வாங்க உடம்புல தெம்பு இல்லைப்பா
கடைநிலை ஊழியன்
எப்படி All Out போட்டா கொசு வராது னு நம்ப படுதோ, அதே மாதிரி தான் இந்த Green Tea ‘யும். குடிச்சா, உடம்பு குறையும் னு நம்பப்படுது !!
Kirachand
அடுத்த 100 நாட்கள் நமக்கு அதி முக்கியமானவை..!”- பிரதமர் மோடி
இன்னும் 100 நாட்கள் பாஜக ஆட்சி இருக்கா? என்ன கொடுமை சரவணன்?
Mannar & company™
தூங்குறவங்களை
தட்டி எழுப்பினால் ஆபிஸ்,
திட்டி எழுப்பினால் வீடு.
அவ்வளோ தான்!
மயக்குநன்
புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கு சரியான நேரம் வந்துவிட்டது!- பிரதமர் மோடி.
பத்து வருஷமா வராத நேரம், தேர்தல் பக்கத்தில் வந்ததும் வந்துடுச்சோ..?!
கடைநிலை ஊழியன்
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே ‘ங்கிற மாதிரி தான், வெயில்காலம் வரும் பின்னே, தர்பூசணி வரும் முன்னே !!
balebalu
2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க த வெ க முடிவு – செய்தி
இவங்க ஒரு 2 கோடி , அதிமுக EPS 2 கோடி , OPS 2 கோடி , சசிகலா 2 கோடி , திமுக 2 கோடி …
அடேய் தமிழ்நாடு மொத்த வாக்காளர்களே 6 கோடி தாண்டா
சரவணன். ????
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு!
நடிகர் எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை!
நாம் எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் உள்பட அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகி விட்டதே?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்