இது என்னப்பா புது பழக்கம்? : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டீ கடைல பாஜக பரமனும், காங்கிரஸ் கார்த்தியும் ஒன்னா இருக்குறத பாத்தேன். உடனே “என்னப்பா பரமா.. இதுவரைக்கும் காங்கிரஸ் ஓட்டு வங்கிய அழிக்க தான் பாஜக திட்டம் போடும்… இப்போ என்னனா நேரடியா காங்கிரஸோட வங்கி கணக்கு மேலேயே கை வச்சிட்டாங்க’னு கேட்டேன்.

அதுக்கு அவன், “பாஜக கவர்மெண்டும் காங்கிரஸ் ஓட்டு வங்கிய அழிக்க தான் நெனச்சிதாம். ஆனா பாருங்க அத தேடி பார்த்தும் எங்கேயும் கெடைக்கல போல.  அதான் வேற வழியில்லாம நேரா பேங்க் அக்கெளண்ட் மேல கை வச்சிடுச்சி’னு பதில் நக்கலா சொன்னான்..

ADVERTISEMENT

இத கேட்ட காங்கிரஸ் கார்த்தி, “என்னென்ன சொல்றான் பாருங்க… நேத்து தேர்தல் பத்திரம் கேசுல சுப்ரீம் கோர்ட் பிஜேபிய தலைலேயே நங்குனு கொட்டிடுடுச்சி…  அந்த அவமானத்துல இருந்து வழக்கம் போல மக்கள் கவனத்த தெச திருப்ப இன்னைக்கு காங்கிரஸ் பேங்க் அக்கவுண்ட் மேல கை வச்சிருக்கு.. அவ்ளோ தான் விஷயம்”னு சூடா பதில் கொடுத்தான்…

அவ்ளோ தான் இன்னைக்கு வந்த வேல முடிஞ்சிது… கிளம்பிட்டேன்.

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

balebalu
நாம ஏதாவது சந்தேகம் கேட்டாலே

லன்ச் பிரேக், ஆபீசர் லீவு , சர்வர் டவுன் ன்னு ஆயிரம் சாக்கு போக்கு சொல்வாங்களேமார்ச் 6 குள்ள கோர்ட் அக்கவுண்ட் டீடெயில்ஸ் கேட்டிருக்கே
என்னல்லாம் காரணம் சொல்ல போறாங்களோ
நினைச்சேன் சிரிச்சேன்
#ElectoralBonds

black cat 2
ஒரு பெண் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு ஆண் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறாள் என்றால் அந்த ஆண் நிச்சயம் photographer ராக தான் இருக்கனும்

வசந்த்
எந்த ஊருக்கு போறீங்க?
எந்த ஊருக்கு பஸ் வந்தாலும் போயிடலாம்னு இருக்கேன்.
-கிளாம்பாக்கம்

Kirachand
வாழ்க்கை பூஜ்யம் என்று நினைத்தால் பூஜ்யம்தான்…
அதுவே என் ராஜ்யம்னு நினைத்தால் ராஜ்யம்தான்…
எண்ணம்போல்தான் வாழ்க்கை!

ℳsd இதயவன்
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது ~ அண்ணாமலை
எழுது இந்தியாவே அதிக கடன் ல தான் இருக்கு னு எழுது ?!

balebalu
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம் – செய்தி
நேற்று தேர்தல் பத்திர விஷயத்தில்
கோர்ட்டில் குட்டு வாங்கியதை மறைக்க என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு

ℳsd இதயவன்
சரத் பவாா் ன் தேசியவாத காங்கிரஸை எந்தக் கட்சியுடனும் இணைக்கப்போவதில்லை~ சுப்ரியா சுலே
ஆமா ஆமா சரத்பவார் தான் வேற கட்சியில் இணைய போகிறார் ?!

ArulrajArun
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம் – செய்தி

பொது மக்கள்; தேர்தல் பத்திரம் மூலமாக அதிக பணம் வாங்கினது பிஜேபி அதுக்கு காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கு முடக்கி இருக்காங்களே , ஒரே குழப்பமா இருக்கே

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எலெக்‌ஷன் ஃப்ளாஷ்: வேடம் கலைத்த கஸ்தூரி…கெளதமியின் இடத்திற்கு போட்டி!

விமர்சனம் : பிரமயுகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share