இன்னைக்கு நம்ம ஃப்ரண்டோட சேர்ந்து டீக்கடைக்கு பேசிக்கிட்டே போனோம்.
என்ன நண்பா, ‘ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவோம்னு அண்ணாமலை சொல்றாரேனு, சொன்னேன்.
அதுக்கு அவரு, முதல்ல மோடி சொன்ன ஆண்டுக்கு ரெண்டு கோடி வேலை வாய்ப்ப கொடுக்க சொல்லுங்க… அப்படி கொடுத்தாலே எல்லோருக்கும் வேலை கிடைச்சிரும். அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு…
என்ன நண்பா டீக்கு காசு கொடுக்காமல் கிளம்பிட்டீங்களேன்னு கேட்டா… அந்த ரெண்டு கோடி வேலை வாய்ப்புல, எனக்கு வேலை கிடைச்சா வந்து தரேன்னு சொல்லிட்டு போயிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
மயக்குநன்
குடும்ப அரசியலை நாங்கள் அடியோடு வெறுக்கிறோம்!- அண்ணாமலை.
‘எடியூரப்பா குடும்ப அரசியல்’ அதில் வரும்ங்களா..?!
Kirachand
தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவதுபோல் உள்ளது! – அண்ணாமலை
இந்தியாவில் வளர்ச்சி என்பது வெறும் கையில் முழம் போடுவது போல் அல்லவா இருக்கிறது!
ℳsd இதயவன்
மீண்டும் ஆட்சிக்கு வந்து 1,000 ஆண்டுகளுக்கான அடித்தளமிடுவோம்! – பிரதமர் மோடி
மறுபடியும் மன்னர் ஆட்சி அதான ஜி ?!
வசந்த்
ஸ்பெயினில் விடியலைக் கண்டு ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆமா நீங்க ஆட்சில இருக்கும் வரைக்கும் தமிழ் நாட்டுல விடியல் வரப்போறது இல்ல அப்பறம் ஸ்பெயின் தான போனும்.
ℳsd இதயவன்
துரோகம் எனும் கத்தியை பழனிச்சாமி கையில் எடுத்துள்ளார் ~டிடிவி தினகரன்
கூவத்தூர்க்கு அப்புறம் அந்த கத்தியில் முத குத்து வாங்குன உங்களுக்கு அந்த கத்தியின் ஆழம் தெரியலைனா தான் ஆச்சரியம்?!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – அண்ணாமலை
சீமார்: இது என் டயலாக் ஆச்சே..
balebalu
இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நினைத்திருந்தார் நேரு- பிரதமர் மோடி
நடுவுல ராமர் கோவில் திறப்புனால நேருவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருந்தார்
இப்போ திரும்ப ஆரம்பிச்சாச்சு
ArulrajArun update kumaru 06-02-2024
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் பணியிடை நீக்கம்! – செய்தி
பாமர மக்கள்; ஏங்க ஆபிசர் உயர் பதவியில இருக்குறவங்க தப்பு செஞ்சா பணியிடை நீக்கத்தை தவிர வேற எதும் அதிகபட்ச தண்டனை இல்லைங்களா?
ச ப் பா ணி
மீண்டும் ஆட்சிக்கு வந்து 1,000 ஆண்டுகளுக்கான அடித்தளமிடுவோம்! – பிரதமர் மோடி!
-ஆயிரம் வருசப்பே
https://twitter.com/manipmp/status/1754480567696167352
தர்மஅடி தர்மலிங்கம்
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே அழிவார்!’ – டி.டி.தினகரன்!
சரி… விடுங்க பாஸ் மக்களுக்கு டோக்கன் கொடுத்து நீங்க செய்யாத துரோகமா..?!
எனக்கொரு டவுட்டு!?
பண்டிகை நேரத்துல குழந்தைகளுக்கு போடுற ட்ரெஸ் எல்லாம் ரெண்டு மணி நேரம்தான் உயிரை பிரிந்த உடல் போல ட்ரெஸ் ஒரு பக்கம் குழந்தைங்க ஒரு பக்கம் இருப்பாங்க..
மயக்குநன்
இண்டியா’ கூட்டணியின் ஒற்றுமை பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை! -கே.எஸ்.அழகிரி.
ஆமாமா… ‘இண்டியா’ கூட்டணியே அதைப் பத்தி கவலைப்படலையே..?!
நெல்லை அண்ணாச்சி
99 நிமிடங்கள் பாராளுமன்றத்தில்
பேசியும் மணிப்பூர்..சீனா ஊடுருவல் பற்றி வாய் திறக்கவில்லை..மோடிஜி
# this is called ” அவையடக்கம் ”
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டிகர் தேர்தல் – ஜனநாயக படுகொலை : உச்ச நீதிமன்றம் காட்டம்!
பாஜக 370 இடங்களில் வெல்லும் : மோடி உறுதி!
update kumaru 06-02-2024