டைவர்ஸ் கூட இத்தன தடவ பண்ணமாட்டாங்க : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு பிகார்ல நிதிஷ் குமார் 9வது முறையா முதல்வரா பதவி ஏத்துக்கிட்டாரு… அத டிவில பாத்து வந்த நண்பன் சதீஷ், ‘பாத்தியாடா இந்தியாவுலயே அதிக முற சி.ஆம் ஆனது நிதிஷ் தாண்டா… இனிமே என்ற ஸ்டேட்டு பிகாரு… என்ற தலைவர் நிதிஷூ’னு ஒரே அமர்க்களம் பண்ணிட்டு இருந்தான்.

அதுக்கு, ‘டேய் சதீஷூ… நிதிஷ் ஒன்னும் ஜெயிச்சி 9 தடவ சி.எம் ஆகல… கூட்டணிய திரும்ப திரும்ப முறிச்சிக்கிட்டு 9வது தடவ சி.எம்.ஆகிக்காரு’னு சொன்னேன்.

அப்படியானு கேட்ட அவன், ‘எது இந்த டைவர்ஸ் பண்ணிட்டு… 4வது கல்யாணம்… 5வது கல்யாணம்னு பண்ணுவாங்களே அது மாதிரியா?’ பட்டுன்னு கேக்குறான்.

இத கேட்டு பக்குனு இருந்தாலும், ’ஆனா யாரும் டைவர்ஸ் கூட இத்தன தடவ பண்ணமாட்டாங்க’னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட் பாருங்க…

தர்மஅடி தர்மலிங்கம்

சேலம் அதிமுகவின் கோட்டை; அங்கு யாரும் நுழைய முடியாது – எடப்பாடி பழனிசாமி

அங்க மட்டன் பிரியாணி போட்டு ஒரு மாநாடே நடத்திட்டாங்க.?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

எதையாவது தொண தொணன்னு பேசி உசுரை எடுக்கறாளுகன்னு
டிவில படம் போட்டு விட்டு டைவர்ட் பண்ணலாம்னு பார்த்தா,
படத்துல அவன் யாரு இது என்னன்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சுறாங்க..

சேதுராமன்

கேப்டன் இறந்து ஒருமாதமே ஆவதால் அரசியல் பேச விரும்பவில்லை ~ பிரேமலதா

போன வாரம் தானே திமுகவை அழிக்கவே கட்சி தொடங்கினார் கேப்டன்னு சொன்னாங்க

அதுக்குள்ள என்னா ஒரு பல்டி..

ச ப் பா ணி

துயரத்தைவிடவும் துயரமானது

ஞாயிற்றுக்கிழமை முள்ளங்கி சாம்பார் சாப்பிடும் துயரம்

amudu

ஹோட்டலில் மட்டும் தான் நாட்டுக் கோழி பிரியாணியில் உள்ள

சிக்கன் ஃபீஸ் கூட பிராய்லர் கோழி ஃபீஸ் சைஸில் உள்ளது.

Poongulali

பொதுச்செயலாளராக முதல்முறையாக பிரேமலதா ஏற்றிய தேமுதிக கொடி பாதியிலேயே அறுந்து விழுந்தது ~ செய்தி ப

கொடி அறுந்து போச்சுனு எப்பவோ தெரியுமே

கடைநிலை ஊழியன்

டு நிதிஷ் – ஆமா, இப்ப முதலமைச்சர் ரா பதவி ஏற்குறிங்களே.. உங்களுக்கு முன்னாடி யார் சார் முதலமைச்சர்..

நிதிஷ் – அதுவும் நான் தான்..

வன்ம கிச்சா

ஹலோ சார்.. document இல்லாம personal loan தரோம்.. free யா இருக்கீங்களா.. பேசலாமா..

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் டா free யா இருக்கேன்.. அன்னைக்கும் free யா இருக்க விட மாட்டிங்குறீங்களே டா..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

சர்தார் 2 பூஜை நிகழ்ச்சி தேதி இதுதானா?

பிகார் ஆட்சி மாற்றம் : நிதிஷ்குமார் – தேஜஸ்வி சொல்வதென்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share