தைப்பூசமா? தேர்தல் பாசமா? : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

Update kumaru January 25

தமிழ்நாட்டுல அயோத்தி ராமர் போயி கடந்த சில நாளா முருகர் டிரெண்டிங்ல வந்துட்டாரு.. இன்னைக்கு உலகம் பூரா இருக்கிற தமிழ் மக்கள் தைப்பூசம்னால கோவிலுக்கு போய் முருகன தரிசிச்சி வழிபட்டு கொண்டாடிட்டு இருக்காங்க. Update kumaru January 25

சாய்ந்தரம் வர அமைதியா இருந்த பிரதமர் அக்கவுண்ட்ல இருந்து கரெக்டா 9.30 மணிக்கு தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!னு ட்வீட் வந்துச்சி.

இத பாத்ததும் என் பக்கமா வந்த கணேசன் கிட்ட, ’ஜி நைட்டுல தைப்பூச வாழ்த்து சொல்றாரே.. என்னவா இருக்கும்?’னு கேட்டேன்.

அதுக்கு அவன், “யோவ் இது தைப்பூசத்த தாண்டி தேர்தல் பாசத்துல வர்ற வாழ்த்து… எலெக்சன் நெருங்க நெருங்க இன்னும் அமாவாசை, பெளர்ணமிக்கெல்லாம் வாழ்த்து சொன்னாலும் சொல்வாரு’ னு அசால்டா சொல்லிட்டு போய்கிட்டே இருந்தான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
டயட்ல இருக்கறதால வெப்சைட்ஸ் எதுவும் browse பண்ணாம இருக்கியா..? என்ன மாப்ள சொல்ற ஒன்னுமே புரியல..
ஆமா மாமா.. எந்த வெப்சைட் போனாலும் ‘Accept Cookies’ ன்னே சொல்லுது மாமா..

ℳsd இதயவன்
“காங்கிரஸ் கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் இணைவோம்” ~மம்தா பானர்ஜி
பாஜகவை தோற்கடிக்க எதையும் செய்வோம் னு சொல்லிட்டு காங்கிரஸ செஞ்சிட்டிங்களே?!

ச ப் பா ணி
Ordinary யாய் இருந்தேன், நீ ஒருத்தி extra வந்ததால் extraordinary ஆனேன்
#கவித

Kirachand
‘தமிழ் தேசிய புலிகள்’…
இனி ‘இந்திய ஜனநாயக புலிகள்’என அழைக்கப்படும்! – மன்சூர் அலிகான்
‘புளி’யா இருக்குமோ?

சரவணன். ????
கள்ளச்சாராயம் குடிச்சு செத்து போனாலும் பத்து லட்சம் தர்றாங்க..
பொய் செய்தியை பரப்பிட்டு யார் கிட்டயோ அடி வாங்கினாலும் மூணு லட்சம் தர்றாங்க..
ஆகா என்னா ஒரு நாகரீக அரசியல் பண்றாங்கப்பா

நெல்லை அண்ணாச்சி
மக்களுக்கு இருக்கும் ” ஆர்வம் ”
தலைவர்களுக்கு இல்லை…
# I.N.D.I.A. வில்…..சிக்கல்

Update kumaru January 25

பர்வீன் யூனுஸ்
நேதாஜி இல்லையென்றால் சுதந்திரம் கிடைத்திருக்காது – ஆளுநர் ரவி # ராஜ்பவனில் மசோதாக்களும் கிடப்பில் இருந்திருக்காது.. அதையும் சொல்லிடுங்க!

balebalu
பட்ஜெட் தயாரிப்பில் மரபுப்படி நடைபெற்ற அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – செய்தி
நல்லவேளை, அல்வா தயாரிப்பு நிகழ்ச்சியை பெரிய LED ஸ்க்ரீன் வைத்து தெருவுக்கு தெரு காட்டணும் ன்னு சொல்லல்ல

Update kumaru January 25

ச ப் பா ணி
தேடிப்போனால் சிறியகட்சி
தேடி வந்தால் பெரிய கட்சி
-அரசியல் கூட்டணிகள்

Update kumaru January 25

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ : இளையராஜா மகள் பவதாரிணி காலமானார்!

ஐசிசி விருது: டிவில்லியர்ஸ் வாழ்நாள் சாதனையை முறியடித்த கோலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share