அதிமுகவோட சின்னம் இரட்டை இலை, கொடியெல்லாம் ஓபிஎஸ் இனிமே பயன்படுத்தக் கூடாதுனு ஹை கோர்ட் உத்தரவு போட்டிருச்சு. இனிமேலாச்சும் கரை வேட்டி கட்டக் கூடாது, கட்சி கொடி பிடிக்க கூடாதுனு எடப்பாடி ஆளுங்க ஓபிசை துவைச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஏற்கனவே சின்னத்தால பல புயலை அதிமுக கடந்து வந்திருக்கு. இந்த ஓபிஎஸ் வேற அப்பீல் போவோம்னு தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்காரு. பேசாம அதிமுக காரங்க, ‘எங்கள் சின்னம் புயல் சின்னம்’னு சொல்லிக்கலாம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
பெண் குழந்தைகளுக்கு அழகழகா எப்படி பேரு வச்சாலும்…’பாப்பா’ன்னு கூப்பிடுவதே நம் வழக்கமாகி விட்டது..

நெல்லை அண்ணாச்சி
BJP தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில்
” ஊழலை ” முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
..மோடிஜி for example… PM CARES..மற்றும் ELECTORAL BOND..!!!

Mannar & company
புரட்டாசி மாசத்தில் காசை ‘கறி’ ஆக்காமல்,
ஐப்பசி மாசத்தில் காசை ‘கரி’ ஆக்குவதே தீபாவளி!
சரவணன். ????
“நல்லாட்சியை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும்” – பிரதமர் மோடி
சிலிண்டர் & பெட்ரோல் டீசல் ~ அதற்கு நானே சாட்சி

balebalu
‘ஐந்தே நிமிடத்தில் செய்து அசத்தலாம்’ என்று சொல்லும் யூ டியூப் வீடியோக்கள்
அதற்கான முன்னேற்பாட்டிற்கு
‘அரைமணி நேரம்’ ஆகும் என்பதை சுலபமாக மறைத்து விடுகின்றன
ச ப் பா ணி
எளிதில் விட முடியாதது Smoking பழக்கம்
எளிதில் விட்டுவிடக் கூடியது Walking

மயக்குநன்
காவல்துறையை வைத்து பாஜக ‘கொடிகளை’ திமுக அரசு அகற்றுகிறது!- அண்ணாமலை குற்றச்சாட்டு.
அமலாக்கத்துறையை வெச்சு நீங்க மட்டும் ‘கோடிகளை’ அகற்றலையா..?!

கோழியின் கிறுக்கல்!
பள்ளி பேருந்தை விட்டு விட்டு அப்பாவுடன் பள்ளிக்கு செல்வதில் மகளுக்கு அலாதி இன்பம்!!

லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மத்திய அமைச்சர் கமல்…திமுக வீசும் தொகுதித் தூண்டில்!
திருட்டு பயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜியோ: வந்தாச்சு ஜியோ மோட்டிவ் GPS
