டீ குடிச்சிக்கிட்டு இருந்தப்ப நம்ம தம்பி ஒருத்தரு செல்போனைத் தூக்கிட்டு வந்து, ‘அட இங்க பாருங்க. இலங்கை கிரிக்கெட் வாரியத்தையே கலைச்சிட்டாங்க. வேர்ல்டு கப்புல மோசமா விளையாடினதால மொத்த கோட்டையும் அழிச்சுட்டு புதுசா போடப் போறாங்களாம்’னு சொன்னாப்ல.
இதுக்கு ஏன் தம்பி இவ்வளவு டென்ஷனாவுற… தேர்தல்ல தொடர்ந்து தோத்துக்கிட்டே இருந்தாலும் எவனாவது கட்சியை கலைக்குறானா… மறுபடியும் மறுபடியும் வந்து கூட்டணி வைச்சிக்கிட்டு நின்னு கையெடுத்து கும்பிட்டுக்கிட்டுதான இருக்கான். ஆனா இதெல்லாம் கிரிக்கெட்ல எதிர்பார்க்க முடியாது… கிரிக்கெட்ல கூட்டணி அமைக்கிற கதையெல்லாம் ஆவாது. தனித்தனியாதான் விளையாடணும். அவங்க அப்பப்ப ஆட்சியையே கலைச்சுட்டு நிக்கிறவங்க, கிரிக்கெட் டீம்லாம் ஒரு மேட்டரானு சொல்லிக்கிட்டே பட்டர் பிஸ்கட்டை உடைச்சேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

Kirachand
அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுப்பு!
அண்ணாமலை நவ் : “நடைபயணமும் மிச்சம்…
அரசு மேல பழியும் போடலாம்… ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்”…
மயக்குநன்
போலி அரசு அலுவலகம் நடத்தி ரூ.4.15 கோடி மோசடி!- குஜராத்தில் 2 பேர் கைது.
குஜராத் மாடல் வேற லெவலுக்கு போயிடுச்சு போலிருக்கே..?!
நாகராஜா சோழன் MA MLA
பிழைக்க வந்த இடத்தில் இருந்து சொந்த ஊர் நோக்கி பயணப்படு பவரிடம் வீசிகிறது
பிறந்த மண் வாசம் !
Mannar & company™
கொசுவும், கொசு பேட்டும் இருக்கும் வீடுகளில் தினமும் தீபாவளிதான்!
ச ப் பா ணி
போனசும் தீபாவளியும் ஒண்ணுதான்…
வர்றதும் தெரியாது போறதும் தெரியாது

balebalu
கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை –
இப்படிக்கு இந்தியஅணி
-Worlds2023
mohanram.ko
மேனேஜர் கிட்ட லீவு கேட்கும்போது, நம்ம பொய்க்கு மனமிறங்கி லீவு கொடுத்தா அவர் நமக்கு அடிமை
நம்ம பொய்யை அவர் கண்டுபிடிச்சிட்டா அவருக்கு நாம அடிமை
மயக்குநன்
‘இண்டியா’ கூட்டணி வென்றால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்!- முதல்வர் ஸ்டாலின்.
மொதல்ல… 5 மாநிலத் தேர்தல் முடியறவரைக்கும் ‘இண்டியா’ கூட்டணியைக் காப்பாத்த முடியுதானு பாருங்க..!

வசந்த்
போன் வைத்திருப்பவர்களுக்கு நேரம் போனதே தெரியாது
லோன் எடுத்தவர்களுக்கு சம்பளம் வந்து போனதே தெரியாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
மெயில் ஐடி இருக்கா? வாட்ஸ்ஆப் லாக்இன் செய்யலாம்!
ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை!
ஆடாமலேயே ‘அவுட்’ ஆன மேத்யூஸ்… வைரலாகும் ‘கண்ணீர் புகைப்படம்!
