இன்னைக்கு வேலைலாம் முடிச்சுட்டு நானும் நண்பரும் வீட்டுக்கு போய்ட்டு இருந்தோம்.
அப்ப, திமுகவோட கூட்டணி வச்சதால கேப்டன் ஆன்மா மன்னிக்காதுனு அந்த கட்சிய பத்தி எல்லாம் விமர்சிச்சுட்டு இருக்காங்க பாத்தீங்களா… இத பத்தி என்ன நினைக்கிறீங்கனு நண்பர்கிட்ட கேட்டேன்…
இது என்ன பிரம்மாதம், இனி அம்மா ஆன்மா மன்னிக்காதுனு சிலர் சீக்கிரம் சொல்லுவாங்க பாருங்கனு சொல்றாரு…
நடந்தாலும் நடக்கும்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

balebalu
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசிர்வாதத்துடன் மு.க.ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும்
– ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் சட்டமன்றத்தில் பேச்சு
ஆஹா எப்படிப்பட்ட வரிகள்

ச ப் பா ணி
பிறர் மெளனத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரே அர்த்தம்
“வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க”

balebalu
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் – பழமொழி
original intelligence இருந்தால் தான் artificial intelligence வரும் -புதுமொழி
-AISummit

ச ப் பா ணி
அலாரம் என்பது நாம் எழும்போது அடுத்தவனையும் எழுப்பிவிடுவதே ஆகும்
ArulrajArun
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசிர்வாதத்துடன் மு.க.ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும்
– ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் சட்டமன்றத்தில் பேச்சு
-எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆதரவாளர்கள்; code word accepted

பனிப்பூக்கள் பார்த்திபன்
தேமுதிகவே கொண்டாட்டத்துல இருக்கு. நீ ஏன்ப்பா சோகமா இருக்க?
நா விஜயகாந்த் ஃபேன் சார்..

❼
Singles : அன்லிமிடெட் Call இருக்கீ…
SMS Free இருக்கீ …
Free நெட் இருக்கீ…
ஆனா பேச ஆள் இருக்காதூ…

சரண்யா
இழக்க எதுவும் இல்லாதவனிடம் இருக்கும் துணிவு,..
லட்சம் படை வீரர்கள் மத்தியில் இருக்கும் அரசனிடம் கூட இருக்காது…
லாக் ஆஃப்
