அண்ணே பிஜேபிக்கும் டவுன் பஸ்சுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கேள்வியை கேட்டு அந்த வீடியோவையும் காட்டினாப்ல நம்ம நண்பர்.
ஒரு வீடியோவுல பிஜேபி அண்ணாமலையோட ரைட் ஹேண்ட் அமர் பிரசாத் ரெட்டி டவுன் பஸ் ல நொந்து நூலாகி தென்காசி போறாரு.
இன்னொரு வீடியோவுல பிஜேபியை சேர்ந்த நாச்சியார்னு ஒரு அம்மா டவுன் பஸ்ல தொங்கிக்கிட்டு வர்ற பசங்களை எல்லாம் அடிச்சு இழுத்து போடுது.
இந்த ரெண்டு வீடியோவையும் பார்த்துட்டு நான் சொன்னேன்…. ‘தம்பி மொத வீடியோவுல ஜெயிலுக்கு போய் பஸ்ல ஏறினாரு. இரண்டாவது வீடியோ பஸ்ல ஏறுனதுனால ஜெயிலுக்கு போனாரு… நீ போய் டீய வாங்கிட்டு வா’னு சொல்லி அனுப்பிச்சேன்.
நீங்க அப்டேட் பாருங்க
Kirachand
சென்னையில் அரசு பேருந்தின் படிகளில் பயணித்த பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா கைது!
சினிமால ‘சீன்’ போடலாம்… பப்ளிக்ல ‘சீன்’ போடலாமா?

நெல்லை அண்ணாச்சி
நீட் விலக்கு நமது இலக்கு – தி மு க.
நீட் இலக்கு நமது விளக்கு – பாஜக திருப்பதி நாராயணன்

கடைநிலை ஊழியன்
டு மழை –
24 மணி நேரத்துல, கரெக்ட்டா நா வெளிய போகும் போது தான் உனக்கு பெய்யனும் தோணுதுல..
ℳsd ❝இதயவன்❞
“அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க காங்கிரஸ்தான் காரணம்” – ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
அப்ப அதுக்கு காரணம் நான் இல்லீயா?!~நேரு?!

ச ப் பா ணி
பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட்-2 நல்லாவே இல்லல்ல..
இதுக்கு வே வே னு பேசும் பார்ட் ஒன்னே ஒகேவாம்
-வீட்டிலிருப்போரின் உரையாடலிலிருந்து

தர்மஅடி தர்மலிங்கம்
ஆளுநரால் தான் திராவிட மாடல் பிரபலம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஆளுநரால் தான் திராவிட மாடலுக்கு ‘பிராபலம்’னும் சொல்றீங்க இப்போ ‘பிரபலம்’னும் சொல்றீங்க புரிஞ்சிக்க முடியலையே.?!
கோழியின் கிறுக்கல்!!
என்ன மாறினாலும் மாறும், தீபாவளிக்கு குலாப் ஜாமூன் மட்டும் மாறாது போல!!
ஆறு பாக்கெட் வாங்கி வச்சிருக்காங்க!!

சிரிப்பு அரங்கம்
அண்ணே சிரிக்க மட்டுமே????????
ஆட்சிக்கு வந்ததும் நீட்டுக்கு எதிரா முதல் கையெழுத்து போடுவேன்னு சொல்லிட்டு, இப்ப எங்ககிட்ட வந்து கையெழுத்து கேட்குறிங்க
~ இப்பவும் அதேதான் சொல்றோம்.. முதல் கையெழுத்த நாங்க போட்டாச்சி… மீதிய நீங்க எல்லாரும் போடுங்க..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
அண்ணாகிராமம் ஒன்றியத்தை மறந்ததா திமுக தலைமை?
மிஷ்கின் நம்பரை இப்படி தான் பதிவு செய்து வைத்துள்ளேன்: பாலா
