இது புதுவித இண்டர்வியூ : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு ப்ரண்ட பாக்கலாம்னு அவருடைய ரூம்க்கு போயிருந்தேன்.  போனவுடனே, எப்படா ரிலீஸ் பன்றாங்கனு கேட்டான்…

யார, என்னத்த எப்ப ரிலீஸ் பன்றாங்க… ஜனநாயகன் படத்த பத்தி கேக்குறியா… அதுதான் கேஸ் போய்ட்டு இருக்குல சொன்னேன்…

ADVERTISEMENT

இத கேட்ட நம்ம  நண்பரு, அது இல்ல… விஜய்யோட படத்ததான் பாக்க முடியல அட்லீஸ்ட் இண்டர்வியூ கொடுத்திருக்காரேமே, அதுதான் எப்ப வரும்னு கேட்டேனு சொன்னாரு…

அட கடவுளே… வீட்டுக்கு போனா டென்சன் பன்னுவாங்கனு இவன பாக்க வந்தா, இவன் அதுக்கு மேல டென்சன் பன்றான்…

ADVERTISEMENT

அடேய் அவரு, பேட்டி கொடுத்தத வீடியோ எடுக்க அனுமதிக்கலயாம், அதனால் பேட்டி எடுத்தவங்ககிட்ட இப்ப பேட்டி எடுத்துட்டு இருக்காங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

ச ப் பா ணி
மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி என்பது..
அத்தை பொன்னு மாமானு கூப்பிடுவதற்கும்
Uncle னு கூப்பிடுவதற்கும் இடையிலானது

கடைநிலை ஊழியன்
மாசம் பிறக்குறது முன்னாடியே, சம்பளம் வாங்குற உங்க உலகம் வேற..
மாசம் பிறந்து 10 நாள் கழிச்சு, சம்பளம் வாங்குற எங்க உலகம் வேற..

கோவிந்தராஜ்
தங்கம் கிராமுக்கு 9,500 ரூபாய் னு விளம்பரம் போட்ருந்தானுங்க
விலை கம்மி ஆகிருச்சு போலனு உள்ள போயி பாத்தா முத்தூட் விளம்பரம்

May be an image of text that says "உன் கல்யாணத்துக்கு உன் ஒரு friends ஒருத்தன் கூட வரல ஏன்டா...? f/alwzsmk அதான் சொன்னேனே... எனக்கு ஒரு கஷ்டம்னா யாரும் வர மாட்டாங்கன்னு.."

butterfly.
அதிர்ச்சினு ஒரு செய்தி
இன்ப அதிர்ச்சினு ஒரு செய்தி, எல்லாம் தங்கத்தால வாறது,
Costly shocking

ச ப் பா ணி
“எப்பவாவதுனா ஓகே” என்பது நம் தவறுக்கு நாமே கொடுக்கும் பாவ மன்னிப்பு

caroline
உன்னோட சம்பளம் எவ்ளோ?
செய்கூலி சேதாரம் இல்லாம ஒரு கிராம் தங்கம் வாங்குற அளவுக்கு

Sasikumar J
வெற்றி குன்று அளவுக்கு எதிர்பார்த்தால்; பயிற்சி மலை அளவுக்கு மேல் இருக்க வேண்டும்…!

mohanram.ko
மத்தவங்கள பத்தி நீ கவலைப்படாதே… உனக்கு பிடிச்சதை செய்…
மீ-டேய் எனக்கு வேலைக்கு போகவே பிடிக்கலடா…. ஜாலியா ஊர் சுத்த தான் பிடிச்சிருக்கு…

butterfly
Style னு நினச்சு பாலோ பண்ணுற
பல விஷயங்கள் தான் ,வாழ்க்கையில பல பேரை Fail ஆக்குது.

லாக் ஆஃப்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share