‘போடா எல்லாம் விட்டுத் தள்ளு… பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு’ : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு ஆபிஸ்ல ஒரே டென்சன்… வீட்டுக்கு போனதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு டிவி போட்டேன். அதுல டிடிவி தினகரனும், எடப்பாடியும் இணைந்தது பத்திதான் நியூஸ் ஓடிட்டு இருந்துச்சு…  நாங்க பழச மறந்துட்டோம்னு ரெண்டு பேரும் பேட்டி கொடுத்துட்டு இருந்தாங்க…

சரினு மியூக் சேனல மாத்துனா, ‘போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா’னு டைமிங் பாட்டு ஓடிட்டு இருக்கு… 

ADVERTISEMENT

நல்ல ரிலாக்‌சேஷன் தான்

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ADVERTISEMENT

ச ப் பா ணி

புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென் தமிழகத்தில் வெல்ல முடியாது – கிருஷ்ணசாமி
-இந்த விசயம் தென் தமிழகத்து மக்களுக்கே தெரியாது

ADVERTISEMENT

mohanram.ko

சிம்ரன், அவரை நான் கேவலமா பேசுவேன், அவர் என்னை ரொம்ப கேவலமாகவே பேசுவாரு… கூட்டணியில், இதை ரெண்டு கட்சியுமே ஜாலியாவே எடுத்துக்குவோம்….

பரமசிவம் ராமசாமி

இருக்கிறவன் முட்டையில்
இருந்து வர கோழியை
சாப்பிடுறான்…!!!

இல்லாதவன் கோழியில்
இருந்து வரும் முட்டைய
சாபிடுறான் தம்பி…..!

mohanram.ko

தூக்கம் வரக்கூடாதுன்னு டிரைவர், காரை நிறுத்தி டீ சாப்பிடுகிறாரு…
கூடவே நல்லா தூங்கிட்டு வர நீங்களும் இறங்கி டீ சாப்பிட்டு மறுபடியும் தூங்கறீங்களேடா …. யார்றா நீங்கெல்லாம்….

Pandidurai

மரியாதைக்குரிய தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்-எடப்பாடி பழனிச்சாமி…
~~இதைத் தான அன்னைக்கு நானும் சொன்னேன் என்னை ஏன் கட்சில இருந்து வெளியே தள்ளுனீங்க…??!

-செங்கோட்டையன்

Writer SJB

நீங்கள் பேசும்போது சிலர் புரிந்தும் புரியாத மாதிரி நடித்தால் நீங்கள் அதை தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்து விடுங்கள்..!

iQKUBAL

Meanwhile God :~
உனக்கு பிரச்சனை குடுத்த என்கிட்டயே வந்து, என்னைய காப்பாத்துன்னு சொல்றவன இப்ப தான்டா பாக்குறேன்.

caroline

ஒருவரால் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஆறுதல் தேடி வேறு ஒருவரிடம் போனால் அவர் மூலமாகவே ஒரு புதிய மன அழுத்தம் வருவது உறுதி.‌.

ச ப் பா ணி
பொட்டல் காட்டில்
‘கொடி கட்டிப் பறக்கிறது’
ரியல் எஸ்டேட் தொழில்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share