சின்னம் குடுத்துட்டாங்களே இனிமேலாவது…. : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி

ADVERTISEMENT

மனுசங்க தினமும் ஓடி ஓடி சம்பாதிப்பது எதுக்கு
இந்த மாசம் E.M.I ஃபைன் இல்லாம கட்டுறதுக்கு தாண்டா

ArulrajArun

ADVERTISEMENT

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

~ ஏண்ணே அடிச்சீங்க??? ஏன் அடிச்சேனா! அவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா… அதான் தவெகவுக்கு விசில் சின்னம் குடுத்துட்டாங்களே இனிமேலாவது பாஜக எதிர்ப்பு சத்தம் வருமான்னு கேட்கிறான் பா …

ADVERTISEMENT

mohanram.ko

நான் என்று சொன்னாலே ….நான் அல்ல நீ தான்….
இப்படி சொல்லித்தான்… நீ வாங்குன கடனை எல்லாம் நான் கட்டிக்கிட்டு இருக்கேன்…

ArulrajArun

“அப்பாவியா” இருந்தவனை
“அட பாவி” மாற்றுவதே இந்த சமுதாயம் தான்..

mohanram.ko

ஒருத்தர், ஒருத்தரா கூட்டணியில் சேர்க்கறாங்களாம்….
அவுங்களே,ஒருத்தர் மட்டுமே இருக்குற கட்சியா பார்த்து சேர்த்துக் கிட்டு இருக்காங்க….

ச ப் பா ணி

அரசியலில் இருந்தே விலகுவதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குன்னம் ராமச்சந்திரன் அறிவிப்பு!
டுட்டோரியல் காலவரையின்றி மூடப்படுகிறது

டிங் டாங்

மனைவியிடமோ அல்லது கணவனிடமோ சண்டையிட்டு
தோற்ற பின்னர், ஜெயித்திருக்கலாமோ என்று தோன்றும்
ஜெயித்த பின்னர், தோற்றிருக்கலாமோ என்று தோன்றும்

caroline

Hus to me :-
~என்ன சாப்பாடு
~ரவால, வெங்காயம்,பச்சமிளகாய்,
கருவேப்பிலை போட்டு ஒரு டிஸ் செஞ்சிர்க்கேன்
~ உப்புமாவா
~ ஆமா

படிக்காதவன்

நான் மட்டுமே நல்லாருந்தா போதாது’ங்ககிறதாலதான்
இந்த அரசியல்வாதிகள் நிறைய சொத்து சேர்த்து வச்சிக்கிட்டே போறாங்கபோல…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share