இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

mohanram.ko
தேர்தல் வாக்குறுதிகள்…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகையை போல இட்லி,தோசை, உப்புமா வுக்கும் பண்டிகை கொண்டாடி விடுமுறை அளிப்போம்…

balebalu
செம த்ரில்லிங்க்கா இருந்தது மாமா
நொடிக்கு நொடி அப்டேட் போச்சு
இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஏதாவது நடக்குதா மாப்ள
இல்ல ஜனநாயகன் வழக்கு விசாரணை மாமா

mohanram.ko
நாலஞ்சு தேர்தல்ல தோத்தவங்க கூட சந்தோஷமா இருக்காங்க … ஒரு தேர்தல் கூட சந்திக்காம நான் படற கஷ்டம் இருக்கே அய்யிய்யோ…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மனிதர்கள் பணம் சார்ந்து இரண்டு காரணங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஒன்று, தனக்கு எதிர்பாரத பணவரவு நடக்கும் போது.. மற்றொன்று, பிறருக்கு எதிர்பாராத செலவு ஏற்படும் போது..

ச ப் பா ணி
எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், சேமிச்சாலும்.. மாசக்கடைசியில் மனைவிகிட்டதான் கடன் வாங்க வேண்டியிருக்கு

ArulrajArun
~ “ஜான் ஏறினால் முழம் சறுக்குது” மாமா
~ என்னது மாப்ள வாழ்க்கைய சொல்றீங்களா
~ வாழ்க்கையா , தங்கத்தின் விலையை சொல்றேன் மாமா..

Selva Bharathi
வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் நடக்காத காரியம். நம் தேவையெல்லாம் வலிமையான மனமே.

iQKUBAL
Meanwhile TNPSC holders :~
காளையை அடக்குறவுங்களுக்குலாம் கவர்ன்மெண்ட் வேலை குடுத்தா, அப்றம் எங்களுக்கு என்ன மருவாதி..

மயக்குநன்
தமிழகத்தில் ‘ஆட்சியில் பங்கு’ குறித்து ஸ்டாலினும், ராகுலும் முடிவு செய்வார்கள்!- செல்வப்பெருந்தகை.
‘கூட்டணிக்கு சங்கு’ குறித்து தமிழக காங்கிரஸ்காரங்க முடிவு செய்வாங்க போல..?!

சரவணன். 𝓜
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி – முதலமைச்சர் ஸ்டாலின்
TNPSC ~ யார் வேலைக்கு எடுக்கறதுன்னு இப்ப காளைக்கும் எனக்கும் தான் போட்டியே..
கோழியின் கிறுக்கல்
என்னங்க காதல் வலி!?
அஞ்சு நாள் விடுமுறை முடிஞ்சு வேலைக்கு போற வலி இருக்கே!!

லாக் ஆஃப்
