லீவுலாம் முடிஞ்சு இன்னிக்கு வழக்கம் போல ஆபிஸுக்கு போனேன்…
காலைல இருந்து எல்லோரும் எப்ப சென்னை திரும்புனிங்கனு ஒரே பேச்சுதான்…
வேலைலாம் முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, நம்ம நண்பர் போன்ல பேசிட்டு இருந்தாரு.
பொங்கல் முடிஞ்சிருச்சா சொல்லு… அப்பதான் வீட்டுக்கு வருவேனு பேசிட்டு இருந்தாரு.
பொங்கல் முடிஞ்சிதான எல்லாரும் ஆபிஸுக்கு வந்துருக்கோம். நீங்க என்ன இப்ப பொங்கல் முடிஞ்சுருச்சானு கேக்குகிறீங்கனு அவர்ட்டையே கேட்டேன்…
அதுக்கு அவர், என் வைஃப் வீட்டுல வைத்த பொங்கல் தீர்ந்து போச்சானு கேட்டேன். பிரிட்ஜ்ல வச்சு அதையே டெய்லியும் குடுக்குறானு சொல்றாரு…
இன்னுமா அந்த பொங்கல் முடியல ….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ச ப் பா ணி
உங்க நல்ல எண்ணத்திற்கு
தொட்டதெல்லாம் வெற்றிதான்…
ராசிபலன் படிக்கும் மொமண்ட்

mohanram.ko
வீட்டில் இருக்கும்போது ஆபீஸ் விஷயத்தை பேசாம இருடா….
அம்மா… நான் வேலை பார்க்கிறதே ‘ஒர்க் பர்ம் ஹோம்’

balebalu
ஆண்களுக்கும் இனி இலவச பஸ் – அதிமுக தேர்தல் அறிக்கை
அரசு பஸ்சுல இனிமே யார் யாரெல்லாம் டிக்கெட் வாங்கணும்
டிரைவரும் கண்டக்டரும் தான்
படிக்காதவன்
வேணும்’னு ஒரு காரணத்தை சொல்லி
வேண்டாம்’னு சொன்னபிறகு மேலும் பேசாம நகர்ந்து போறதுதான்
நமக்கு மரியாதை…

ArulrajArun
~ ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு முதன் முதலில் நடைமுறைப்படுத்தியது மனைவிமார்கள் தான்
~ எத வச்சு சொல்லுற
~ அதான் துணி துவைப்பதில் இருந்து பாத்திரம் கழுவுதல் சமைப்பது வரைக்கும் கணவருக்கு அதிகாரம் குடுத்து இருக்காங்களே …

ச ப் பா ணி
ஊர்ல இருந்து சென்னை வர்ற நேரமும்,
சென்னைக்குள் நுழைந்து வீட்டுக்குப் போகும் நேரமும்
ஒரே நேரமா

mohanram.ko
திமுகவுக்கு நான் இருக்குறதே மறந்துடுச்சு..” சசிகலா பரபரப்பு பேட்டி
மக்கள் -அவுங்களுக்கு மட்டுமா மறந்துடுச்சி… எங்களுக்கும் தான்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
Communication skill னா என்னன்னு தெரியுமா..?
நமக்கு சரியா இங்கிலீஸ் பேச வராதுன்னு யாருக்கும் தெரியாம பார்த்துக்கறது..

மயக்குநன்
தேர்தலை மனதில் வைத்து, இந்த ஆண்டு பொங்கலுக்கு திமுக அரசு ரூ.3 ஆயிரம் கொடுத்ததைக் கண்டு மக்கள் மயங்கமாட்டார்கள்!- வானதி சீனிவாசன்.
பிஹார் மாதிரி ரூ.10 ஆயிரம் கொடுத்தாதான் மயங்குவாங்கனு சொல்றாங்களோ..?!

mohanram.ko
இன்னும் ஒரு நாள் தான் இருக்கும் மாமா
பொங்கல் லீவா… மாப்ள…
முந்தா நாள் வச்ச பொங்கல்…மாமா

டிங் டாங்
துணிப்பை எடுத்துச் செல்ல அவமானப்பட்ட நாம்தானின்று
பிளாஸ்டிக்கைத் தின்றுகொண்டிருக்கிறோம்…

லாக் ஆஃப்
