வெள்ளி கிழமை லீவு வேணாம் சார் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு வீட்ல எல்லோரும் நியூஸ் பாத்துட்டு இருந்தாங்க… கரெக்ட்டா நானும் எண்ட்ரி கொடுத்தேன்…

என் தம்பி சோகமா இருந்தான்… என்னடானு கேட்டா ஜனநாயகன் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகாது போல தெரிது…

ADVERTISEMENT

நான் வேற, மேனேஜர்கிட்ட கேட்டு படத்துக்கு போலாம்னு லீவு வாங்கி வச்சிருந்தேன்…

இப்ப அந்த லீவ கேன்சல் பன்னனும்… படம் போடுற அன்னைக்கு லீவு எடுக்கனும். அதனால மேனேஜர்கிட்ட எப்படி பேசுறது யோசிச்சிகிட்டு இருக்கேனு சொல்றான்…

ADVERTISEMENT

ஊருல அவனவனுக்கு என்ன பிரச்சினை, இவனுக்கு என்ன பிரச்சினை பாத்தீங்களா…

நீங்கள் அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

பனை – எதிரொலி

நேற்று நடந்த சண்டையை
இன்றும் தொடராமல் இருப்பவனே சிறந்த நண்பன்

ArulrajArun

~ ஏய் இங்க பாருடி ஜனநாயகன் படத்துக்கா இல்ல பராசக்தி படத்துக்காக ன்னு தெரியல டிக்கெட் புக் பண்ண இவ்வளவு வேகமா கிளம்பிட்டாரு
~ டிக்கெட் புக் பண்ணவா நானே ரேசன் கடையில 3000 காசு வாங்க போயிட்டு இருக்கேன்

mohanram.ko

கண் மருத்துவரிடம் செல்லும் நோயாளிகள் எல்லோருமே கண்’டெஸ்ட்’டண்ட் தான் ….

iQKUBAL 

அதுல பாருங்க சம்பந்தி, ராசிபலன்ல போட்ருக்க கெட்டது எல்லாமே நமக்கு கரெக்டா நடக்கும்..
ஆனா அதுல போட்ருக்க நல்லது ஒன்னு கூட நடக்காது..

Sasikumar J

ரேஷன் கார்டு எங்க இருக்கு, பொங்கல் வருது போய் பச்சரிசி வாங்கிட்டு வரேன்…!
யோவ் நம்ம கார்டுக்கு அரிசி எல்லாம் கிடையாது சக்கரை மட்டும்தான்…!!

மயக்குநன்

பசுமைத் தாயகம் தலைவர் பதவியிலிருந்து சவுமியா அன்புமணியை நீக்கி, ஸ்ரீகாந்தியை நியமித்த ராமதாஸ்!- செய்தி.
மொத்தத்தில் பா.ம.க-வே ‘பகைமை’த் தாயகமா மாறிடும் போலிருக்கே..?!

டிங் டாங்

இந்த 32 உளவியல் தந்திரங்கள் தெரிஞ்சா உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது!
மனைவி : என்னாது?
நான் : சும்மா ரீல்ஸ் பாத்துட்டு இருக்கேம்மா

ArulrajArun

வெனிசூவெலா நாட்டில் இருந்து எண்ணெய் வணிகத்தை தொடங்கிய அமெரிக்கா
அட வெக்கங்கெட்டவங்கள இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொல்லயையும திரியனும்…

சரண்யா

ஒரு பிரச்சனை என்பது பிரச்சனையே அல்ல,
பிரச்சனையை பிரச்சனையாக பார்க்கும் மனநிலை தான் நமக்கு பிரச்சனை

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share