பொங்கலுக்கு ரூ.5000ம்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு எல்லாருக்கும் போன் பன்னி நியூ இயர் விஷ் சொல்லிட்டு இருந்தேன்…

அப்ப நம்ம நண்பர்க்கு கால் பன்னும் போது குரல் சோகமா இருந்துச்சு… என்ன நண்பானு கேட்டேன்…

ADVERTISEMENT

பொங்கல் பரிசுக்கு ரூ. 248 கோடி ஒதுக்கி  2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசு, சர்க்கரைலாம் கொடுக்க சொல்லிருக்காங்கனு சொன்னாரு…

நல்ல விஷயம் தானேனு சொன்னேன்… அதெல்லாம் இல்லப்பா… தேர்தல் வர்றதுனாலா ரூ.3000, ரூ.5000 கொடுப்பாங்கனு பேச்சுலாம் வந்துச்சே… இத வச்சிட்டு பொங்கல் பண்டிகைய ஓட்டிடலாம்னு நினைச்சேன்… இப்ப ஒதுக்கியிருக்க நிதிய வச்சு எப்படி கொடுக்க முடியும்னு கேட்டாரு..

ADVERTISEMENT

சரி, சரி கவலைப்படாதீங்க…. சர்ப்ரைஸா அன்னவுன்ஸ் பன்னுவாங்கனு அவருக்கு ஆறுதல் சொல்லி விஷ் பன்னிட்டு போன வச்சிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

Writer SJB

எல்லாத்தையும் பிடுங்கிட்டு இன்னைக்கு தான் ஒருத்தன் போறான்,
இதோ,
கொத்தோடு பிடுங்கிட்டு போக இன்னொருத்தன் வந்துட்டான்..!

mohanram.ko

‘Ear end’ல் மாட்டிக்கொண்டிருக்கிறது ஜிமிக்கி…

கோழியின் கிறுக்கல்!!

கொசு மட்டும் கடிக்க ஆரம்பிக்கட்டும்,
குளிராவது, ஒண்ணாவது!!
வைடா, அஞ்சுல Fanஐ!!

ச ப் பா ணி

Hus: புது வருஷத்துக்கு என்ன வேணும்.. சொல்லு வாங்கி தரேன்
Wife: அடகு வச்ச நகையை எடுத்துக் கொடுங்க
Hus:??!!??!

iQKUBAL 

போனா வராது
பொழுது போனா கிடைக்காது ..
-2025

ச ப் பா ணி

நம் மறதியின் ஒட்டு மொத்த உருவம்தான்..அடுத்த முறை அதே தொகுதியில் வந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்

Writer SJB

வருஷம் பூரா ஆன்லைன்ல மளிகை சாமான் வாங்க வேண்டியது
வருஷ கடைசியில வந்து நாலு ஷாம்பு பாக்கெட் வாங்கிட்டு காலண்டர் கேக்க வேண்டியது,,,

mohanram.ko

மெக்கானிக் பழுது நீக்குவது தான் ‘மிஷின்’சக்ஸஸ்ஃபுல்…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share