தீபாவளி நெருங்கிடுச்சு… இந்த வருஷம் பண்டிகை ஞாயித்து கிழமை வந்தாலும், எப்படியோ பேசி கீசி மேனேஜர்கிட்ட ஒரு மூணு நாள் லீவு வாங்கிட்டேன்.
அப்பாடா ஊருக்கு போய் பிள்ளைங்களோட தீபாவளிய கொண்டாடலாம்னு நினைச்சு ட்ரெயின் டிக்கெட் பாத்தேன் எல்லாம் புல் ஆயிடுச்சு, சரி பஸ்ல போலாம்னு அரசு பேருந்து இணையதளத்த ஓபன் பண்ணேன், அங்கேயும் எல்லாம் புக்காயிடுச்சுனு காமிக்குது…
ஆம்னி பஸ்ல ஓவர் டிக்கெட் விலையா இருக்கு….
இப்ப நான் எப்படிதான் ஊருக்கு போறது. எப்படி ஊருக்கு போறதுனு நினைச்சி கவலப்படுறதா இல்ல எப்படியாவது ஊருக்கு போய் பிள்ளைங்களோட கொண்டாடலாம்னு சந்தோஷப்படுறதா…
சரி நீங்க அப்டேட்ட பாருங்க…

Kirachand
திராவிடம் பற்றி ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்! – முதல்வர் ஸ்டாலின்
அவர் தான் ஒரு ஆளுநர் என்றே புரிந்து கொள்ளவில்லையே பாஸ்!

தர்மஅடி தர்மலிங்கம்
கௌதமி குற்றம் சாட்டும் அன்பழகன் யாரென்றே எங்களுக்குத் தெரியாது’’ – கரு.நாகராஜன்!
நல்லவேளை… கௌதமியை யாருன்னு சொல்லாம விட்டாரே.?!

Mannar & company
சென்னையில் இருக்கும் வெளியூர்வாசிகளின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது.
தீபாவளிக்கு ஊருக்கு போகலாமா இல்ல இங்கேயே இருந்துடலாமா.. பஸ், ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணி இந்த மழைல போயிட்டு வர்றதுக்குள்ளே.. அப்பப்பா!

amudu
ஒரு வீட்டில் நடக்கும் சண்டை, பக்கத்து வீடுகளுக்கு தெரியாமல் இருப்பதில் பெரும் பங்கு வகிப்பது டிவியின் சத்தம் தான்.
balebalu
குஜராத்தில் போலியாக அரசு அலுவலகம் நடத்தி அரசிடம் இருந்து ₹4.16 கோடி வரை பெற்று மோசடியில் ஈடுபட்ட நபர் கைது – செய்தி
போலி அரசு நடத்தியது கூட பரவாயில்லை ஆனா அதுக்கு அரசு கிட்ட இருந்து நிதி வாங்கி இருக்குறான் அடேங்கப்பா

தர்மஅடி தர்மலிங்கம்
பாஜகவுக்கு இபிஎஸ் ‘துரோகம்’ செய்துள்ளார்” – டிடிவி தினகரன்!
சரி… சரி… அதுக்கு ஏன் உங்களுக்கு ‘கோபம்’ வருது.?!
மயக்குநன்
சிலர் சமூகத்தைப் பிளவுபடுத்தி மோதலை ஏற்படுத்துகின்றனர்!- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.
அது கண்ணாடி ஜீ..!

லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு : சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
