இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்வீட்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

iQKUBAL
இங்க போட்டியே ரெண்டு பேருக்கு தான்..
ஒன்னு Office politics..
இன்னொன்னு Family politics..

ச ப் பா ணி
குளுருதுன்னு கொஞ்ச நேரம் பேன் ஆஃப் பண்ணா போதுமே..,
உடனே கூட்டமா சேர்ந்து வந்துருவிங்களே…கொசு

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“தமிழ்நாடு அயோத்தி போல் மாறுவதில் தவறல்ல..” -நயினார் நாகேந்திரன்
– ஒருவழியா, உண்மையை அவங்க வாயாலயே ஒத்துகிட்டாங்க வாசு..

balebalu
தமிழ்நாடு அயோத்தி போல் மாறுவதில் தவறல்ல – நயினார் நாகேந்திரன்
மைண்ட் வாய்ஸ் ன்னு நினைச்சு சத்தமா உண்மையை உளறிட்டாரோ

Sasikumar J
கேரி பேக் கொடுக்காத கடையில் வாங்கிய சாமான்களுக்கு ஹெல்மெட் தான் கூடைப்பை…!
Mannar & company™
சனிக்கிழமைகளில் ஸ்கூல் இருந்தால்,
காற்றில் பறந்துக்கொண்டு இருக்கும் பட்டத்தை கயிற்றுல கட்டி ‘கிளாஸுக்கு வா’ன்னு இழுப்பது மாதிரிதான்.”

ச ப் பா ணி
கனவுகளின் எக்ஸ்பயரி நேரத்தை அலாரமே தீர்மானிக்கிறது
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
டிக்கெட் வாங்கியும் இன்டிகோ பிளைட் உள்ள விடலேன்னு நீ வருத்தப்படற, ஏர்போர்ட்டுக்கு உள்ளயே விடலேன்னு நிறைய பேர் வருத்தப்படறாங்க..

iQKUBAL
தொடர்ந்து 30 நாள் சைக்கிள் ஓட்டுனா……
தொப்பை குறையுமா?
அதான் இல்ல.. சைக்கிள் டயர்ல காத்து தான் குறையும்

படிக்காதவன்™
பட்டில ஆட்ட கட்டி வைக்கிற மாதிரிதான்
பேங்க்ல பேனாவ கட்டி வச்சிருக்கிறதும்
யாரும் களவாடிட கூடாதுன்னு…

லாக் ஆஃப்
