ADVERTISEMENT

இந்த தீர்ப்பையும் செயல்படுத்துவீங்களா?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்வீட்டுகளை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க….

ArulrajArun

ADVERTISEMENT

நம்ம உடம்புக்கு எந்த தொந்தரவும் வராம இருக்கிற வரைக்கும் எல்லாமே வரவு தான் , நம்ம உடம்புக்கு எதாவது ஒரு தொந்தரவு வந்துச்சு அதுக்கு அப்புறம் எல்லாமே செலவு தான்…

Mannar & company

ADVERTISEMENT

இட்லிக்கு நம்மை கேட்கமலேயே வடை வைக்கிற ஹோட்டல்கள் மாதிரிதான்,
கடவுள் நமக்கு கொடுக்கிற பிரச்சினைகளும்!

ச ப் பா ணி

ADVERTISEMENT

பணம் இருந்தாதான் நாலு பேர் மதிப்பாங்க என்பது
ஏ.டி.எம் க்கும் பொருந்தும்

கோழியின் கிறுக்கல்

யாருங்க சொன்னா பசங்களுக்கு தேதிகள் ஞாபகம் இருக்காதுன்னு!?
எங்களுக்கு, EMI தேதி, Insurance Renewal தேதி, FD maturity தேதி எல்லாம் அப்படி ஞாபகம் இருக்கும்ங்க!!

டிங் டாங்

யாரையும் ஏமாற்றக்கூடாது என்று சொல்லிக்கொடுத்த தாத்தாவின் வயலில் சோளக்காட்டு பொம்மை…

Writer SJB

மதுரைக்கு எய்ம்ஸ் வரலன்னு போராட மாட்டாங்க
மதுரைக்கு மெட்ரோ வரலன்னு போராட மாட்டாங்க
தீபம் ஏத்துறதுக்கு மட்டும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாங்க..!!!

டிங் டாங்

பல்லில்லாமல் கூட சாப்பிட முடியும், செல்லில்லாமல் சாப்பிட முடியாது.

குருநாதா

காசு இல்லைனா ஒரு நாய் கூட மதிக்காது
காசு இருந்தாலும் நாய் மதிக்காது
ஏன்னா நாய்க்கு காசுனா என்னனே தெரியாது

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share