இன்னிக்கு சண்டே… நண்பர்கள் கூட ஜாலியா ரெஸ்டாரண்ட் போனோம்… அங்கிருந்த டிவியில காஞ்சிபுரத்துல விஜய் பேசினது ரிப்பீட் மோடுல ஓடிட்டே இருந்துச்சு…
அதுல ஏண்டா இந்த விஜய்ய தொட்டோம்னு ஃபீல் பன்னுவீங்கனு தவெக தலைவர் பேசியிருந்தார்.
இந்த கேட்ட நம்ம நண்பரு, ஆமா யார் ஃபீல் பண்ணுவாங்களாம்னு கேட்டார்.
அதுக்கு இன்னொருத்தரு, தொண்டர்கள் தான் பீல் பன்றாங்களாம்… பவுன்சர்கள் விஜய்ய தொட விடாம தடுக்குறாங்கனு சொல்றாரு.
நீங்கள் அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company™
ஆண்களுக்கு தோழிகள் கொடுக்காத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் ‘கோழிகள்’ கொடுத்து விடுகின்றன!

ச ப் பா ணி
எவ்வளவு தான் டயட் கண்ட்ரோலா இருந்தாலும்.. பஜ்ஜி ,போண்டாவை பார்த்ததும் மனசு மாறிடுது டாக்டர்

மயக்குநன்
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் தோற்கவில்லை; ஜனநாயகம்தான் தோற்றது!- செல்வப்பெருந்தகை.
காங்கிரஸ் பெயரை ஜனநாயகம்னு மாத்திட்டாங்களோ..?!

தர்மஅடி தர்மலிங்கம்
“அதிமுக நண்பர்களின் வாக்குரிமையை காப்பாற்றப்போவதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
இதுவும் திமுக தேர்தல் வாக்குறுதியில கொண்டு வந்திடுவாங்களோ.?!

balebalu
தெரு நாய்களை பாதுகாக்கவே ஓட்டு போட்டோம் – நிவேதாபெத்து ராஜ்
ஓஹோ நாங்கல்லாம் மக்களை பாதுகாக்க தான் அரசு இருக்கு ன்னு நினைச்சு தெரியாம ஓட்டு போட்டுட்டோம் போல

Mannar & company
சொந்தக்காரர்களும், சலூன் கடைக்காரர்களும் ஒண்ணுதான்..
நாம ‘தலை தூக்கும்’போதெல்லாம் “தலைகுனிய” வச்சிடுறாங்க!

ச ப் பா ணி
கஷ்டத்திற்கும் ரொம்ப கஷ்டத்திற்கும் எவ்வளவு இடைவெளி?
மாத இறுதிக்கும்
வருட இறுதிக்குமான இடைவெளி அது.

தர்மஅடி தர்மலிங்கம்
கூட்டணியில் பாஜகவிற்கு எத்தனை தொகுதி என்பது முக்கியமல்ல – நயினார் நாகேந்திரன்!
அதானே…. அதெல்லாம் ஜெயிக்கிற கட்சிக்கு உண்டான பிரச்சனையாச்சே.?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
டாக்டர் : சொல்லுங்க.. உங்களுக்கு எங்க வலிக்குது..?
Me : ஆபிஸ், வீடுன்னு எல்லா இடத்துலயும் தான் டாக்டர்

மயக்குநன்
பிஹார் தேர்தலுக்காக உலக வங்கி வழங்கிய நிதி ரூ.14,000 கோடியை தவறாகப் பயன்படுத்தினர்!- ஜன் சுராஜ் குற்றச்சாட்டு.
உலக வங்கிகிட்ட நிதியை வாங்கி… வாக்கு வங்கியில டெபாசிட் பண்ணிட்டாங்க போல..?!

கோழியின் கிறுக்கல்!!
தோசையெல்லாம் தீய்ந்து போயிருந்தால் கோபம் என்றிறக,
ஒன்று தீய்ந்தும், மற்றொன்று வேகாமலும் இருந்தால் கடுங்கோபம் என்றறிக

லாக் ஆஃப்
