அப்போ… ராகுல் காந்தி சொன்னது உண்மையா? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கே நண்பர் ஒருத்தர் மாறு வேடத்தில் வந்திருந்தார். என்னன்னு கேட்டேன்.

அவர், “மாப்ள அது வேற ஒன்னும் இல்ல, நான் நாலு கெட்டப்பில் டீக்குடிக்க வருவேன். மாஸ்டரும் அது தெரியாம… நாலு பேருல கணக்கு எழுதி வச்சிடுவாரு. மாச கடைசில ஒரு கணக்குக்கு மட்டும் செட்டில் பண்ணிடுவேன்”னு சொன்னாரு.

ADVERTISEMENT

அடப்பாவி இத எங்கய்யா கத்துக்கிட்ட? அப்படின்னு கேட்டேன்

அதுக்கு “இதெல்லாம் புதுசாவா பண்றோம் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை நடக்குற எலக்சன்ல இந்த மாதிரி பண்றது இல்லையா அத இங்க அப்ளை பண்றேன்”னு சொல்லிட்டு போறாரு.

ADVERTISEMENT

இதைக் கேட்டதும் அப்ப ராகுல் காந்தி சொன்னது உண்மைதான் போலனு ஷாக் ஆயிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

நெல்லை அண்ணாச்சி

அதிமுக .,..வெளியேற்றம்…
பாஜக…….ஏமாற்றம்…
விஜய்…..புறக்கணிப்பு..
# இன்னமும் பயிற்சி
வேண்டுமோ..!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

விவசாயிகள் நலனில் சமரசம் கிடையாது – மோடி

விவசாயிகள் போராட்டம்னு வந்தா மட்டும், டெல்லி பார்டரை தடுப்பு இரும்பு ஆணி எல்லாம் பயன்படுத்தி சீல் வைப்போம், இன்டர்நெட்டை தடை பண்ணுவோம், மத்தபடி சமரசம் எதுவும் பண்ணிக்க மாட்டோம்ங்க..

ச ப் பா ணி

நீ உறங்கும்போது அடிப்பதல்ல அலாரம்..உன்னை உறங்கவிடாமல் செய்வதே அலாரம்.

நெல்லை அண்ணாச்சி

நம்மளையே இந்த பாடு படுத்துறாரே..அமெரிக்கா மக்களை நினைச்சேன் சிரிப்பு வந்துடிச்சு…டிரம்ப்

amudu

கணவரின் திருட்டுத் தனத்தை பற்றி, மனைவி கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.

ச ப் பா ணி

கவலையை மறப்பது கலை
கவலையை மறைப்பது மாபெரும் கலை

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

”வீட்டு எண் 0.. தந்தை பெயர்: dfiggoidf”
டேய்.. இது சைதாப்பேட்டை டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்ல நான் தப்பு தப்பா பிராக்டீஸ் பண்ண alphabets டா..

மயக்குநன்

அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி!- எடப்பாடி பழனிசாமி.

அப்படி யாரும் சொல்லிடக் கூடாதுன்னுதான் பாஜக கூட கூட்டணி வச்சிட்டீங்களோ..?!

ச ப் பா ணி

கவனிப்பது கண்காணிப்பாக மாறும்போது..
அன்பு வெறுப்பாக மாற்றப்படுகிறது

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share