எக்ஸாம் பரிதாபங்கள்… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு அக்கா பையன் கால் பண்ணியிருந்தான்.

“மாமா… நெக்ஸ்ட்‌ மன்த் பப்ளிக் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுதுன்னு” சொன்னான்.

ADVERTISEMENT

“சூப்பர் டா… நல்லா படின்னு” அவன என்கரேஜ் பண்ணேன்.

“என் ஃப்ரெண்ட் நல்ல மார்க் எடுத்தா அவங்க வீட்டுல மொபைல் வாங்கி கொடுக்குறேன்னு சொன்னாங்களாம்”

ADVERTISEMENT

பயபுள்ள எதுக்கு போன் அடிச்சிருக்கான்னு தெரிஞ்சு போச்சு…

“ஃப்ரெண்ட் வீட்டுல மொபைல் வாங்கி கொடுத்தா உனக்கு என்னடான்னு” கேட்டேன்.

ADVERTISEMENT

“இல்ல… ஐபோன் 16 E புதுசா வந்திருக்கு.‌ அறுபதாயிரம் ரூபா தான். அந்த மொபைல் வாங்கிக்கொடு மாமான்னு” கேட்டான்.

“ஒழுங்கா போய் படிச்சு பாஸ்‌ ஆகுற வழிய பாருடான்னு” சொன்னேன்.

“இனிமே நான் உங்கிட்ட பேசவே மாட்டேன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டான்.

பல வீடுகள்ள இதுதான் இப்போ நிலைமை..

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
5 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தினால் உடனடியாக Gold Card எனப்படும் குடியுரிமை கிடைக்கும் – ட்ரம்ப்
2௦௦ ரூபாய் கொண்டு வந்தா ஆப்பிள் ஜூஸ் 4௦௦ ரூபாய் கொண்டு வந்தா ஆட்டுக்கால் சூப்

நெல்லை அண்ணாச்சி
நான் மோடியின் பக்தன் ..ஓபிஎஸ்… # Iron ” லேடி ” யின் பக்தன் இல்லையா..!!

ச ப் பா ணி
ஆப்கன் வீரர்களுக்கு Hats off இங்கிலாந்து வீரர்கள் Switch off -ENGvAFG

சரவணன். 𝓜

~ அந்த சாதியைச் சேர்ந்த கட்சியின் கொடி கம்பத்தை சாய்ச்சு விட்டுட்டாங்களாமே, எங்க அது மாதிரி ஆச்சு? ~ நம்ம நடத்திய சமூக சமய நல்லிணக்க மாநாட்டுல தான்..

கடைநிலை ஊழியன்

me – வர வர ஃபோன் ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்குது.. my mobile – உன்கிட்ட இருக்குற பிரச்சனைலயே, இது தான் பெரிய பிரச்சனை ல..

iQKUBAL

நெனச்சபடி.. நெனச்சபடி.. மணப்பொண்ணு அமைஞ்சதடி.. நெனச்சபடிலாம் அமையலடா.. எல்லாம் அந்த புரோக்கர் பய பண்ண வேலை.

குருநாதா
ஹிந்தி எதிர்ப்புனா என்ன ணா? ஹிந்தி திணிக்கக்கூடாதுனு சொல்லிட்டு விருப்பட்டு கத்துகிறது மா..

ச ப் பா ணி
உண்மையான நண்பனை ஆபத்தில் அறி. அவந்தான் கிண்டல் செய்து சிரிச்சிட்டு இருப்பான்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share