இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.
“டேய் ஃபுக் ஃபேர் போகலாமான்னு” கேட்டேன்.
“இல்லடா… கடைசி நாள் போகலாம்னு” சொன்னான்.
“ஏன்டா எதாவது வேலை இருக்கான்னு” கேட்டேன்.
“இல்ல… கடைசி நாள் போனா தான் விக்காத புக் நிறைய இருக்கும். கம்மியான ரேட்டுக்கு தருவாங்க. நிறைய புக் வாங்கலாம்னு” சொன்னான்.
“டேய் அது என்ன காய்கறி மார்க்கெட்டா. கடைசி நேரத்துல எக்ஸ்ட்ரா கொடுக்கன்னு” கேட்டேன்.
பயபுல்ல பதில் சொல்ல மாட்றான்.
இவனுங்கல்லாம் தெரிஞ்சு தான் இப்படி பேசுறானுங்களா இல்ல தெரியாம பேசுறானுங்களான்னே தெரியல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

▶படிக்காதவன்™✍
தோலை உரிச்சு தொங்கவிட்ருவேன்னு சொல்ற மாதிரி தான்
தின காலண்டர் வாங்கி தினமும் கிழிக்காம பேருக்கு மாட்டி தொங்கவிட்ருக்குறதும்…

நெல்லை அண்ணாச்சி
தமிழ்நாடு உட்பட 29 மாநில தலைவர்களை தேர்வு செய்வதில் பாஜக தீவிரம்-
செருப்பு இல்லாத காலும், சாட்டையும் கை கொடுக்குமா…!!

Sasikumar J
மதகஜராஜா படம் ரிலீசுக்கு ஒரு காலம் வரும்போது நமக்குன்னு ஒரு காலம் வராமலா போயிடும்…!

Joe…
பொங்கல் பரிசுத்தொகை 1000 ரூ கொடுத்தே ஆகணும்னு இன்னைக்கு போராடுறதுலாம் யாருன்னு நினைச்சே,
இலவசத்தாலதான் நாடே வம்பா போகுதுன்னு சொல்லி அன்னைக்கு மிக்ஸி, கிரைண்டர தூக்கி ரோட்டுல எரிஞ்ச பயலுகதான்.
Mannar & company
NewYearResolutions எடுக்க வேண்டியது விடாமுயற்சி டீம் தான் இந்த வருசம் எப்படியும் படத்தை வெளியிட்டு விடுவோம்னு ‘விடாமுயற்சி’ பண்ணணும்!
-விடாமுயற்சி

ச ப் பா ணி
Introvert is a word
நெஞ்சழுத்தம் புடிச்ச பய is an emotion
75% டீ – டோட்டலர் கீரி
~“தை” பிறந்தா வழி பிறக்கும்..
.இதோட 30 ஆவது “தை” டா எனக்கு…
ச ப் பா ணி
சிலர் தவறான விடையளிக்கும் போது
உண்மையான விடை கேள்விக்குறியாகி விடுகிறது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
லாக் ஆஃப்