இன்னைக்கு ஆபிஸ்ல நண்பன் ஒருத்தன், “ஓகே தோழர், வாங்க தோழர், சாப்டாச்சா தோழர்னு” எல்லோரையும் தோழர் தோழர்னு சொல்லி பேசிக்கிட்டு இருந்தான்.
”என்ன திடீர்னு தோழர்னு கூப்பிடுறான்னு” ஆபிஸ்ல உள்ள நண்பர்கள் கிட்ட கேட்டேன்.
”இல்லை… நேத்து தான் விடுதலை 2 படம் பார்த்துட்டு வந்துருக்கான். அதான்… அந்த படத்தோட எஃபெக்ட்ல எல்லோரையும் தோழர்னு சொல்லி கூப்டுக்கிட்டு இருக்கான்னு” சொன்னாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?
உப்பு இட்டவரை உள்ளளவும் நினை ன்னு பழமொழி இருக்கே
அப்போ
உப்புக்கு வரி போட்டவரை எத்தனை நாளைக்கு நினைக்கணும் ன்னு கேக்குறாம்ப்பா
ச ப் பா ணி
ஒரு வார்த்தை மட்டும் போதுமானதாய்
இருக்கிறது உறவை இட்டுச் செல்வதற்கும்
விட்டுச் செல்வதற்கும்

ArulrajArun
Traffic signal லில் break பிடிக்காத வண்டியை ஓட்டிச் செல்வது போல தான் சிலரது வாழ்க்கை
நெல்லை அண்ணாச்சி
எங்க காலத்தில் சாப்டுற சோத்துக்கும்…
கட்டிக்கிற துணிக்கும்.., GST கிடையாது…!!!

ச ப் பா ணி
திங்கட்கிழமை காலை அடிக்கும் அலாரத்துக்கு ஆயுள் அதிகம்
தர்மஅடி தர்மலிங்கம்
நேரு குடும்பத்துக்கு உதவ அரசியல் சாசனத்தில் பல திருத்தங்களை காங்கிரஸ் செய்தது – நிர்மலா சீதாராமன்!
அதானி குடும்பத்துக்கு உதவ பல திருத்தங்களை செய்தது மாதிரிங்களா.?!
balebalu
அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கடா ?
கோவில் உண்டியலில் விழுந்திடுச்சு அண்ணே

mohanram.ko
பாப்கார்ன்க்கு 18% ஜிஎஸ்டி போட்டா, மக்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்க..
யாரு சொல்றது? இந்த 10 ரூபாய் பாப்கார்னை 100 ரூபாய்க்கு விற்பாரே அந்த தியேட்டர் ஓனரா?

மயக்குநன்
மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது!- நிர்மலா சீதாராமன்.
மல்லையா மட்டும்தான் இன்னும் திரும்பலை போல..?!
கோழியின் கிறுக்கல்!!
நாம் ‘நல்லா இருக்கோமா இல்லையா?’ என்கிற குழப்பதிலேயே பாதி வாழ்க்கை போய் விடுகிறது!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
மாற்று சினிமாவின் முன்னோடி இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்!
5, 8-ஆம் வகுப்பு நோ ஆல் பாஸ்… மத்திய அரசு முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு!
‘எங்களுக்கு வேண்டாம், தெலுங்கு சினிமாவை ஆந்திராவுக்கு கொண்டு போங்க’ – அடுத்த பரபரப்பு!
