இன்னைக்கு நண்பர் ஒருத்தனுக்கு காலையில 10 மணி வாக்குல போன் பண்ணேன். ஃபுல் ரிங்கு போச்சு… போனை எடுக்கல.
12 மணிக்கு போல திருப்பி கால் பண்ணான். “மாப்ள… குட்மார்னிங் இப்ப தான் எழுந்திருச்சேன். கால் பண்ணத பார்க்கலைன்னு” சொன்னான்.
“டேய் மதியம் 12 மணி உனக்கு குட் மார்னிங்கா… மோடி ஜி ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும் தான் டா தூங்குறாராம். மீதி 19 மணி நேரம் நாட்டுக்காக அர்ப்பணிக்குறாரு. அவருக்கிட்ட இருந்து கத்துக்கடா. நீ இப்படி தூங்குனா இந்தியா எப்படி வல்லரசாகும்னு” சொன்னேன்.
“சரி… அவரு மூணு மணி நேரமாவது ரெஸ்ட் எடுக்காரு. அவரோட போட்டோகிராஃபர்ஸ மட்டும் ஏன் 24 மணி நேரமும் வேலை வாங்குறாருன்னு” கேட்டான்.
அவன் சொல்றதும் வாஸ்தவம் தான்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டார்
அடேய்….
அவரு பாஜக M.P….டா..!!!

Selva Bharathi
தொழில் நுட்பம் அப்டேட் ஆவது போலவே, திருட்டு வேலைகளும் அப்டேட் ஆகிக் கொண்டே போகின்றன.
ச ப் பா ணி
வர்ற புத்தகக் கண்காட்சியில் படிக்கிறவங்க எண்ணிக்கையைவிட..
புத்தகம் எழுதறவங்க எண்ணிக்கை அதிகம் இருக்கும் போல.

புகழ்
வயிறு எரிச்சல் என்பது உடல் கோளாறு ..
வயிற்றெரிச்சல் என்பது மனக்கோளாறு..
செங்காந்தள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்.
ஜனநாயகக் கோவில் வேறு, சனாதனக் கோவில் வேறு என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

mohanram.ko
3 மணி நேரம் மட்டுமே உறங்குவதாக நடிகர் சைஃப் அலி கானிடம் தெரிவித்த பிரதமர் மோடி.
இதையே தான் அந்த கேமராமேனும் சொன்னான்
கோழியின் கிறுக்கல்!!
உலகத்திலேயே மிகக் கடினமானது,
பிடித்தவர்களிடம் ‘No’ சொல்வது தான்,
ஆனால் அதற்கு பழகுவதே உச்சப்பட்ச முதிர்ச்சி!!

லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன்?: நாராயணன் திருப்பதி கேள்வி!
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது.. டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை!