வாழ்க்கைல ஒவ்வொரு முறை வர பிரச்சனையும் புயலா, புஸ்பாமனு பாத்துட்டு அத கடந்து போயிருவோம்.
ஆனா ஒவ்வொரு வருஷமும் இந்த 12வது மாசம் நெருங்கையில உண்மையாவே புயல் வந்து தமிழ்நாட்டு மக்களோட வாழ்க்கையில விளையாடிட்டு போயிருது.
ஆனா இதுக்கு நடுவுலயும் கோபமா வர்றவண்ட போயி குசலம் விசாரிக்கிற மாறி வேகமா வர்ற பெஞ்சல் புயல கொஞ்டம் கூட கண்டுக்காம ஒரு கூட்டம் கடற்கரைல போயி செல்பி எடுத்துட்டு இருக்காங்க பாருங்க… முடியல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
ஜல்லிக்கட்டு காளை மாதிரி கம்பீரமா அங்கும் இங்கும் போக்கு காட்டுது ????????????
FengalCyclone

ச ப் பா ணி
கடலா புயலா வெயிலா மழையா என்னை ஒன்றும் செய்யாதடா.!
தம்பி நீங்க திருப்பூரா….?
ஐயா…. ஆமாங்கய்யா…

balebalu
சென்னை ல மட்டும் தான்
பொங்கலுக்கும் நாலு நாள் லீவு
ஃபெங்கல் க்கும் நாலு நாள் லீவு
FengalCyclone

ச ப் பா ணி
அலாரம் அடிச்சு எழும் பசங்களை விட,
அம்மா அடிச்சு எழுப்பும் பசங்களே அதிகம்
-குளிர்காலம்

கடைநிலை ஊழியன்
to media –
கொஞ்சம் speed ‘டா காத்து அடிச்சாலே குடை பறக்க தான் செய்யும்.. புயல்ல நீங்க எதுக்குடா சும்மா showoff பண்றீங்க..

மயக்குநன்
இந்தியா- கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம்!- பிரதமர் மோடி.
அப்படியே மணிப்பூர் மாநிலத்தில் இரு இன மக்களிடையேயான உறவையும் மேம்படுத்தினா நல்லாயிருக்கும்..!

amudu
குடும்பஸ்தர்கள் காசி, ராமேஷ்வரம் என புனித யாத்திரை செல்கிறார்கள். சாமியார்கள் ஹனிமூன் செல்கிறார்கள்.

Sasikumar J
கல்நெஞ்சகாரன் கூட சீக்கரம் கரைந்து போயிடுவான் ஆனா இந்த லைபாய் சோப்பு அவ்வளவு சீக்கிரம் கரையாது…!

Mannar & company™????
வருசா வருசம் ‘மாட்டிக்கிட்டு’ முழிக்கிறது காலண்டர்கள்!
காலண்டர்_ட்வீட்கள்
பெஞ்சல் புயல்!

ஆரம்பத்துல இருந்தே நீ கொஞ்சம் கூட சரி இல்ல……
மொதல்ல உன்ன புயல்னு சொன்னாய்ங்க,……
அப்பறம் வலு இழந்துச்சுனு சொன்னாய்ங்க……
அப்பறம் நகரலனு சொன்னாய்ங்க……..
இப்ப நாளைக்கு கரைய கடக்கும்னு சொல்றாய்ங்க
நேத்து பெங்கல் புயல்ன்னு சொன்னாய்ங்க…….
இன்னைக்கி ஃபெஞ்சல் புயலுன்னு சொல்றாய்ங்க…….
என்ன நினைச்சிட்டு இருக்க நீ உன் மனசுல சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு….!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
சென்னையில் ஷாக்: ஏடிஎம் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
டெல்லியில் காற்றுக்கும் காசு… 20 நிமிஷத்துக்கு எவ்வளவு தெரியுமா?
