கொஞ்சம் இங்க பாருங்க… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டீக்கடைக்கு போனா, பேப்பர கையில் வச்சிக்கிட்டு ’கஸ்தூரி ஜெயில்ல இருக்காங்க… பாவம் அவங்க ஒரு பெண், அந்த குழந்தைய வெளிய வச்சிட்டு எப்படி அவங்களால ஜெயில்ல இருக்க முடியும்? எவ்ளோ கொடும பண்றாங்க’னு பேசிட்டு இருந்தாரு ஒரு அங்கிள்.

எதேச்சையா அவர் பக்கத்துல இருந்தவரு, ’யோவ் உன் பையன் காலேஜ்ல என்ன படிக்கிறான்? அவன் செமஸ்டர் மார்க் தெரியுமா’னு கேட்டாரு…

ADVERTISEMENT

நானும் பதில் சொல்லுவாருனு பாத்தா, திருதிருன்னு முழுச்சிட்டு ’டீ நல்லாவே இல்ல’னு நைசா அந்த இடத்த காலி பண்ணிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ADVERTISEMENT

நெல்லை அண்ணாச்சி

ADVERTISEMENT

விமானம் பறக்கும் தத்துவத்தை கண்டுபிடித்தவர்

” பரத்வாஜ முனிவர்”

….உ.பி.ஆளுநர்

# நம்ம ஆளு..”சொக்க தங்கம்”

Joe…

கருத்து கந்தசாமிஸ் ;

In home ~ இவகூடலாம் மனுஷன் வாழ்வானா?! நிம்மதியே இல்ல இவளால..

In SM ~ இணைபிரியாமல் வாழ்வதே இணையர்க்கு அழகு.. டைவர்ஸ் என்பது தீர்வல்ல..

????????????????????????????

எந்த கேள்விக்கும் விடை தெரியாத போதிலும் துணிந்து எழுத ஆரம்பிக்கும் தேர்வு தான்

வாழ்க்கை என்பது!!

கடைநிலை ஊழியன்

ஒண்ணு 5 நிமிஷம், இல்ல 10 நிமிஷம் watch ல டைம் fast டா வச்சு பாத்துருக்கேன்.. ஆமா நீ எதுக்கு 8 நிமிஷம் fast டா வச்சுருக்க..

5 நிமிஷம், 10 நிமிஷம் வச்சா, எவ்ளோ மணி னு easy யா கணக்கு பண்ணிரலாம்.. 8 நிமிஷம் வச்சா கணக்கு பண்ண கஷ்டம் ல.. அதான்..

ச ப் பா ணி

மனைவி கோபமாக இருக்கிறாள் என்பதை மகள் போன் செய்யும்போது கண்டுகொள்ளலாம்

மயக்குநன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட டாஸ்மாக்கும், போதைப் பழக்கமுமே காரணம்!- அன்புமணி ராமதாஸ்.

‘முதல் நாள், முதல் கையெழுத்து’ போடுற வாய்ப்பை உங்களுக்கு வழங்கி இருந்தா இதெல்லாம் நடந்திருக்காது… அப்படித்தானே சொல்ல வர்றீங்க..?!

சரவணன். ????

அது சரிங்க சார்.. அந்த தொழில்நுட்ப கோளாறுல இந்திக்கு எதுவும் ஆகாம இங்க்லீஷ்க்கு மட்டும் எப்படி ப்ராப்ளம் ஆச்சு..

கோழியின் கிறுக்கல்!!

திருமண விழாக்களில் மாப்பிள்ளை, பெண்ணை விட

முக்கியமானவர்கள்,

காமிராமேன்கள்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆப் 

EXIT POLL : ஜார்க்கண்ட்டில் ஆட்சியை இழக்கிறதா ஜே.எம்.எம்?

EXIT POLL : மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்ற போவது யார்?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : காவல்துறை பற்றி நீதிமன்றம் சொன்னது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share