இன்னைக்கு ஆண்கள் தினமாம்… வழக்கம்போல் கவுண்டமணி அவர் படத்துக்கே மாலை போடுற மீம்ஸ் எல்லா வாட்ஸ் அப் குரூப்லயும் வைரலா காலைல சேர் ஆச்சு… அவ்ளோ தான் அதோட ஆண்கள் தினம் முடிஞ்சது.
டீக்கட மாஸ்டருல இருந்து டீ வித்து பிரதமர் ஆன மோடி வர ஆண்களால தானே இந்த உலகம் இயங்கிட்டு இருக்கு… ஒரு பேச்சுக்கு கூட யாரும் ஒரு வாழ்த்து தெரிவிக்க காணோம்…
இதே மகளிர் தினமா மட்டும் இருக்கட்டும்… ஆண்டிப்பட்டில இருந்து அமெரிக்கா வரைக்கும் அன்னைக்கு புல்லா ஒரே ’சிங்க பெண்ணே’ வாழ்த்து அனலா பறக்கும்…
என்ன செய்ய… ஆண்களோட டிசைன் அப்டி போல… அடுத்த வருஷமாவது எப்படி இருக்குனு பாப்போம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
சரவணன். ????
ஓடிடில படம் வரும் போது தான் பார்ப்பேன்..
~ நெட்ஃப்ளிக்ஸ்சா அமேசான் ப்ரைமா?
டெலிகிராம்..!
நெல்லை அண்ணாச்சி
வடக்கன்ஸ் களுக்கு இந்தி ” வாசிக்க ” தெரியாது….
எங்களுக்கும் புரியாது…
#எதற்கு இந்தி மட்டுமே in LIC
ச ப் பா ணி
திருப்பூர் பார்முலா..
கூட்டத்திற்கு வந்தால்
Chair இலவசம்
சரவணன். ????
நெட்ஃப்ளிக்ஸ் டூ நயன்தாரா ~
இந்தா புள்ள.. உன் கல்யாண வீடியோவை 20 கோடி கொடுத்து வாங்கிட்டோம்ன்னு சொல்லிக்கிட்டு திரியாத.. அப்புறம் இருக்குற பூரா நடிகைங்களும் கிளம்பி வந்துடப் போறாங்க..
ச ப் பா ணி
உணவு, உடை, உறைவிடம்,
“சி டைப் சார்ஜர்”
mohanram.ko
விஜய் கட்சியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது!- எடப்பாடி பழனிசாமி
அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே
மயக்குநன்
பிஹாரின் தர்பங்கா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
ஒத்தச் செங்கலைக் காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்யற வாய்ப்பை தேஜஸ்வி யாதவுக்கு கொடுக்காம இருந்தா சரி..!
ArulrajArun
அவனை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு
யார…. என்ன தான் சொல்லுறேன்
#InternationalMensDay
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
Maharastra Election : ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி… சிக்கிய பாஜக பொதுச் செயலாளர்!