அடங்கப்பா இது உலக மகா உருட்டுடா… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட சேட்டா கடைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.

சேட்டா கிட்ட ரெண்டு கட்டன் சாயா போட சொல்லிட்டு நண்பன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

“டேய்… நைட்லாம் தூக்கமே வரமாட்டுக்குது. என்ன பண்றதுன்னே தெரியலன்னு” பொலம்புனேன்.

“நான் சொல்றத ஒரு வாரம் பண்ணு. ஆட்டோமேடிக்கா தூக்கம் வந்துரும்னு” சொன்னான்.

“டேய் தயவு செஞ்சு சொல்றான்னு” கேட்டேன்

“அது ஒன்னும் இல்லை நண்பா. யூடியூப்ல சீமான் ஸ்பீச் கேளு. நல்ல கதை சொல்லுவாரு. அதை கேட்டா தானா தூக்கம் வந்துருடான்னு” சொன்னான்.

“சரிடா ட்ரை பண்ணி பார்க்குறேன்னு” அவன்கிட்ட சொல்லிட்டு சாயா குடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… 

butterfly
எவ்வளவு போராடினாலும் ,சின்ன நம்பர்ல இருந்து பெரிய நம்பரை கழிக்கிற மாதிரியே வாழ்க்கை போகுதே

டீ இன்னும் வரலை
இவ்வளவு கஷ்டப்படுறிங்களே
கஷ்டமா இல்லையா…?
கஷ்டப்படுறேன் அவ்வளவு தான்… அதுக்கு எதுக்கு கஷ்டப்படனும் ..

நெல்லை அண்ணாச்சி
மருத்துவர்கள் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றியது அந்த காலம்…
தங்கள் ” உயிரையே ” காப்பாற்ற வேண்டியது
இந்த காலம்…!!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கையில் குடையோ ஒதுங்க இடமோ இல்லாத போது, மழையை ரசிக்க தொடங்கி விடுவதே புத்திசாலித்தனம்.

mohanram.ko
ரெஸ்ட் இல்லாம வேலை சொல்லிக்கிட்டே இருக்காங்க…மாமா
மேனேஜரா? மாப்ள…
மேனேஜரா? என் மனைவி… மாமா

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்னே டாக்டரை அடிச்சீங்க..?
பின்ன என்னப்பா..? காய்ச்சல் சரியாகனும்னா மருந்து சாப்பிடனும்னு எனக்கு ஆர்டர் போடறான்..

Image

ச ப் பா ணி
எவ்வளவு டீசண்டா இருந்தாலும்..
கூட்டத்தில் எவனாவது எருமைனு கூப்பிட்டா.. ஏண்டா திரும்பிப் பாக்கிற

Sasikumar J
பேர் மட்டும் தான் 90 ஃபீட் ரோடு ஒரு கார் மட்டும் தான் போக முடியுது…!
-Mumbai

Image

balebalu
தொலைக்கவும் கூடாது
தொல்லையாகி விடவும் கூடாது
#உறவு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

அரசு டாக்டரை தாக்கிய விக்னேஷ்… எப்படி இருக்கிறார் சிறையில்?

‘இது என் கட்சி, வெளியே போடா’… நெல்லை நாதக கூட்டத்தில் நடந்த களேபரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share