லியோ ஃபீவர் லிமிட் தாண்டி போகுதே…. : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

லியோ ஃபீவர் இப்போ எல்லா பக்கமும் தலைகாட்ட ஆரம்பிச்சிடுச்சு…. இன்னும் படம் தயாரித்த லலித்துக்கே தமிழ்நாட்டுல FDFS எத்தன மணிக்கு ரிலீஸ் ஆகும்னு தெரியாம சுத்திட்டு இருக்காரு…

இதுக்கிடையில லியோ ஃபீவர் முத்தி சுத்திட்டு இருந்த நம்ம நண்பர் ஒருத்தர்… கறிக்கடையில போயி, “ஒரு கிலோ ஹைனா கறி எவ்வளோ?”ன்னு கேட்டுருக்காரு…. காண்டான கறிக்கடை பாயி ஜெயிலரோட விசிறி போல…  ’என்ன ஜெயிலுக்கு போக வெச்சிராத’ன்னு கத்திருக்காராம்…

ADVERTISEMENT

நல்ல வேள.. நம்ம ஊர்ல யாரும் இன்னும் டைனோசர் படம் எடுக்கல…

நீங்க அப்டேட் பாருங்க…

ADVERTISEMENT

மயக்குநன்
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கித்தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம்!- சரத்குமார்.
‘வந்தே பாரத்’ ரயில்லதானே..?!

ADVERTISEMENT

Kirachand
பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார்! – அண்ணாமலை
நீங்க பொய் சொல்லலயே?

ℳsd ❝இதயவன்❞
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு தமிழக ஆளுநா் கையொப்பம் போட மாட்டாா் என நம்பிக்கை உள்ளது~ அண்ணாமலை
ஆனா சிறுபான்மை மக்கள் எல்லாரும் உங்களுக்கு வாக்களிப்பாங்க னு இன்னும் நம்பிக்கையும் உள்ளது?!

balebalu
பிரதமரின் வாக்கு திண்டுக்கல் பூட்டு போல் உறுதியானது – அண்ணாமலை
உண்மைதான்
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் வாய் மூடி இருக்காரே

ஊர்க்காவலன்™
Cheetah – நா மணிக்கு 400 km வேகத்துல போவேன்..
Sunday -நானெல்லாம் கண்ண மூடி தொறக்குறதுகுள்ள போயிருவேன் போவியா..

மயக்குநன்
அதிமுக கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்!- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
கூட்டணிக்கு ‘முடிவு செஞ்சதே’ உங்க கட்சியின் மாநிலத் தலைமைதானே..?!

கோழியின் கிறுக்கல்!!
நாம என்னைக்கு வண்டியை கழுவி பளபளன்னு எடுத்துட்டு போற அன்னைக்கு தான்,
மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி வண்டியை நாறடிக்கும்!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

2011 உலகக்கோப்பை : கவுதம் கம்பீர் மீண்டும் அதிரடி கருத்து!

ஃபிலிப்கார்ட் பண்டிகை விற்பனை : 1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share