இவங்க அக்கப்போரு தாங்க முடியலப்பா… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நண்பர் ஒருத்தர்கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்

“தீபாவளிக்கு டிரெஸ்லாம் எடுத்தாச்சான்னு” கேட்டேன்.

ADVERTISEMENT

“அட… நீ வேற போ நண்பா… ஏற்கனவே ஒவ்வொரு மாசக்கடைசியையும் சமாளிக்கிறதே பெரிய அக்கப்போறா இருக்கு. இதுல கரெக்டா 31-ஆம் தேதி தான் தீபாவளி வருதுன்னு” உச் கொட்டுனாப்ல.

“யோவ்.. தீபாவளி மாசத்தோட தொடக்கத்துல வந்தாலும், பைசா காலியாகிருதுன்னு குறை சொல்றீங்க. மாசக்கடைசியில வந்தாலும் குறை சொல்றீங்க. எப்போம் தான்யா தீபாவளி வரனும்னு” கேட்டேன்.

ADVERTISEMENT

“நண்பா… ஒரு போன் வருது… ஒரு நிமிஷம் இருங்க நான் பேசிட்டு வந்துறேன்னு” சொல்லிட்டு போனவரு தான், அப்புறம் ஆளையே காணல.

இவனுங்களையெல்லாம் வச்சி என்ன பண்றது…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
அரண்மனை 5ம் பாகத்திற்கு தயாராகும் சுந்தர் சி- செய்தி
“அரண்மனையில் காஞ்சனா” ன்னு டைட்டில் வெச்சா இன்னும் எவ்வளவு பார்ட் வேணா எடுக்கலாம்

ச ப் பா ணி
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று சுற்றுச்சூழல் துறை இன்று அறிவிப்பு
மழை:நான்தான் இருக்கேன்ல

Sasikumar J
ஒரு முறை ஏமாந்து பாரு உலகமே உனக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருக்கும்…!

 

Mannar & company™????
ஆமா இப்ப எதுக்கு ஆளுநரை மாத்துறீங்க?
அப்பத்தான் அவர் எவ்வளவோ பரவாயில்லைன்னு உங்களுக்கு தெரியும்!

ச ப் பா ணி
பில் கவுண்டரில் பணம் அனுப்ப g.pay
சுத்திக்கொண்டே இருக்கும் போது உருவாக்கும்
திகிலை எந்த பேய்ப்படமும் தரமுடியாது

வசந்த்
நேத்து நைட் அடிச்சு போட்ட மாதிரி தூங்கிட்டேன் ப்ரோ
டேய் அடிச்சு போட்டா எப்படி டா தூக்கம் வரும்..

மெத்த வீட்டான்
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என்பது தீபாவளிக்கே போனஸ் !

mohanram.ko
அரண்மனை 5ம் பாகத்திற்கு தயாராகும் சுந்தர் சி
படத்தை எடுக்கப்போறீங்கன்னு தெரிஞ்சதுமே பயமா இருக்குப்பா

கடைநிலை ஊழியன்
அம்மாக்கள் –
தீபாவளிக்கு புது டிரஸ் எடுத்துட்டு, எக்ஸ்ட்ரா ஒரு கட்டைப்பை’ய கேட்டு வாங்கிட்டு வர நாங்க எங்க..
showroom டிரஸ் எடுத்துட்டு, எக்ஸ்ட்ரா 5 ரூபாய் குடுத்து பைய வாங்கிட்டு வர நீங்க எங்க..

செங்காந்தள்
அரண்மனை 5ம் பாகத்திற்கு தயாராகும் சுந்தர் சி
இதோ நானும் வந்துட்டேன் – ராகவா லாரன்ஸ்

கோழியின் கிறுக்கல்!!
பண்டிகை காலங்களில் பெண்கள் புடவை தேடுவதை விட மிக கடினமானது,
ஆண்கள் கடைத்தெருவில் பார்க்கிங் தேடுவது!!

balebalu
அயோத்தி வழக்கில் தீர்வு கேட்டு கடவுளை வேண்டினேன்-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு
நல்ல வேளை கோவிலில் பூ கட்டி பார்த்து தீர்ப்பு சொன்னேன் ன்னு சொல்லல்ல

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

லாக் ஆஃப்

பிக்பாசில் அர்னவ் அவுட்… இன்ஸ்டாவில் திவ்யா போடும் பதிவுகள் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share