இப்பவே கண்ணக்கட்டுதே… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு வீட்டுல அம்மாக்கிட்ட சாப்பிடறதுக்கு எதாவது ஸ்நாக்ஸ் இருக்கான்னு கேட்டேன்.

உடனே அவல் அல்வா, அவல் கேக் எடுத்துட்டு வந்தாங்க…

என்னம்மா, புதுசு, புதுசா டிஷ் பண்ணிருக்கன்னு கேட்டேன்.

இல்லடா… சரவஸ்வதி பூஜைக்கு அவல் மீந்துபோச்சு… அதான் வேஸ்டா போயிருமேன்னு ஸ்நாக்ஸ் பண்ணிட்டேன்னு சொன்னாங்க…

வேற வழியில்லாம சாப்பிட்டேன்.

அடுத்த வாரம் தீபாவளி வேற வரப்போகுது. ஒரு வாரம் முறுக்கு, அதிரசம் கொடுத்து சாகடிப்பாங்க. அதை நினைச்சா இப்பவே கண்ணக்கட்டுது.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

balebalu
பாடுபவர்கள் , வழக்கமான வரிகள் இல்லையே என்று சற்று தடுமாறி பாடுவதை கேட்க முடிகிறது
மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்து இருப்பாங்க போல ????‍♂️
#தமிழ்த்தாய்வாழ்த்து

பரமசிவம் ராமசாமி
தகுதிக்கு மீறி வாங்கப் படும் கடன்களுக்கு…
நமது நிம்மதியே வட்டியாக செலுத்தப்படுகிறது!!

கோழியின் கிறுக்கல்!!
ஆலமரத்தடி தாத்தாக்களே,
அந்த கால ‘கூகுள் மேப்’!!

balebalu
தமிழ்த்தாய் வாழ்த்துல சில வரிகளை விட்டு தவறா பாடிட்டாங்களே ன்னு உனக்கு கவலை
ஹிந்தி தாய் வாழ்த்து பாடலையே ன்னு எனக்கு சந்தோசம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது
காற்றழுத்த தாழ்வு பகுதி
# அடேய் கலையலங்காரம்.. மறுபடியும் காரை கொண்டு போயி மேம்பாலத்துல நிறுத்த வேண்டிய வேலை வந்துருச்சுடா..

????????????????????????????
நடந்தவற்றுக்கு விளக்கங்கள் அதிகம் தரப்படுமாயின்
அது பொய் என்று அறிக!!!

கோழியின் கிறுக்கல்!!
மழைக்காக காத்திருக்கும் சென்னை போல நான்,
என்னை ஏமாற்றி விட்ட காற்றழுத்த தாழ்வு நிலை நீ!!

ச ப் பா ணி
இன்னியோட புரட்டாசி முடியுது.. இனி இருக்கு நான் வெஜ்க்கு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

நோபல் பரிசு வாங்கிய இந்தியர்கள்… சி.வி.ராமனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்!

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share