என்னம்மா யோசிக்கிறாங்க: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு காலையில பக்கத்து வீட்டு பையன் ஒருத்தன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

“டேய்… இன்னைக்கு ஸ்கூல் தான நீ போகலையான்னு” கேட்டேன்.

“இன்னைக்கும் லீவ் விட்ருவாங்கன்னு நினைச்சு நல்லா தூங்கிட்டேனா, லேட்டா தான் எழுந்திருச்சேன். அதான் ஸ்கூல் போக முடியலன்னு” சொன்னான்.

“சரி.. நாளைக்காவது ஸ்கூல் போயிருவியான்னு” கேட்டேன்.

“அதான் நியூஸ் சேனல் பார்த்துக்கிட்டு இருக்கேனா… நாளைக்கும் லீவ் விட்டாங்கனா, சனி, ஞாயிறு வீக் எண்ட் லீவ் வந்துரும். மொத்தமா இந்த வாரம் மட்டும் ஆறு நாள் லீவ் கிடைச்சிரும்னா. எப்படியாவது நாளைக்கு மழை வந்தரனும்னு” சொன்னான்.

“செம்ம பிளானிங் டா… இத கொஞ்சம் உன்னோட சப்ஜெக்ட்ல போட்டாக்கூட நீ காலாண்டு எக்ஸாம்ல பாஸாகிருப்பன்னு” சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
கண் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை – செய்தி
அப்ப இனிமே மக்களுக்கு தீர்ப்பு எல்லாம் சீக்கிரம் வந்துடுமா
அதான் இல்ல
சிலை பற்றிய விவாதம் தான் அதிகம் நடக்கும்

நெல்லை அண்ணாச்சி
அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்னைகளை
” தீர்த்தோம் ”
– எடப்பாடி பழனிசாமி # for example….தூத்துக்குடி…!!

கடைநிலை ஊழியன்
என்ன வெயில் இப்படி அடிக்குது.. ஒரு வேல இந்த வெயில் மேகத்த தான் satellite image பாத்து புயல் னு ரெட் அலெர்ட் போட்டாங்களா..

ச ப் பா ணி
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்பது போலத்தான்..
‘இங்கு தீபாவளி பட்டாசுகள் சிவகாசி விலைக்கே கிடைக்கும்னு எழுதி வைத்திருப்பதும்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பெண்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்..
மருமகன்கள் எவ்வளவு பாவம் என்று..

நெல்லை அண்ணாச்சி

அஸ்ஸாமில் ரயில் விபத்து
# ” அச்சா தின் ஆஹயே ”

✒️Writer SJB✒️
அப்பாவ கல்யாணம் பண்ணதே தப்புன்னு சொல்ற நீ ஏன் அவரை மேரேஜ் பண்ண?
போன் அட்டென்ட் பண்ண பின்னாடி தானடி அது ராங் கால்னு தெரியுது..!

Mannar & company™????
பிரட் உப்புமா, பிரட் பொறியல், பிரட் டோஸ்ட், பிரட் அல்வான்னு இன்னிக்கு எல்லாமே பிரட்லேயே பண்ணிருக்கியே ஏன்?!
புயல் மழை வெள்ளம் வருதுன்னு 15 பிரட் பாக்கெட் வாங்கிட்டு வந்து வச்சா என்ன பண்றது அதான் வீணாப் போயிடுமேனு இதெல்லாம் பண்ணிட்டேன்!!

Amitha
உன்னை நம்பி ஆபிஸ்க்கு லீவ் போட்டு, காரை கொண்டு போய் மேம்பாலத்தில் நிப்பாட்டி பைன் வாங்கிட்டு,…
மெழுகுவர்த்தி, ரெடிமேட் சப்பாத்தி, ரொட்டி வாங்கி வைச்சு, பிஸ்கெட்டுக்கு சண்டை போட்டு, பஜ்ஜி மாவு கிலோ கணக்குல வாங்கி…
எவ்ளோ பெர்பாமன்ஸ் செய்திருக்கேண்டா நானு…
நீ என்னடானா மரியாதையே இல்லாம ஆந்திராவுக்குப் போறேனுட்டு போற….

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

லாக் அப்

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் : ஐகோர்ட்டு!

தயாராகிறதா ‘கஜினி – 2’?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share