நாளைக்கு ஆயுத பூஜை… எப்படி இன்னிக்கு ஊருக்கு போனா பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கும்னு, மேனேஜர்கிட்ட ஒரு நாள் லீவு சொல்லிட்டு நேத்து நைட்டே ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்…
ரொம்ப நாள் கழிச்சு வந்ததால வரவேற்புலாம் நல்லாதான் இருந்துச்சு…
அப்பாடா 4 நாளைக்கு ரெஸ்ட்னு பெட்ல படுத்தா, உடனே வந்து எங்கம்மா ஒட்டட குச்சிய நீட்டுறாங்க… இந்தா மேல இருக்க ஒட்டடையெல்லாம் தொடச்சிவிடு எனக்கு எட்டலனு சொன்னாங்க…
சரினு தொடச்சி கொடுத்தா, ஃபேன தொட, வீடு கழுவ தண்ணீர் எடுத்துட்டு வானு வேலை வச்சியே உசுர வாங்குறாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
குருநாதா
உனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை மாறும்
மாறி?
இப்ப இருக்குற வாழ்க்கை மீண்டும் வராதானு ஏங்க வைக்கும்
Sasikumar J
பண்டிகை நாட்களில் பூவுக்கு மட்டுமல்ல சொந்தஊருக்கு போக வர பஸ், டிரெயின் போக்குவரத்துக்கும் கிராக்கி தான்..!
ச ப் பா ணி
ஆணவத்தால் அழிந்தவர்கள் போன தலைமுறை
ஆண்ட்ராய்டால் அழிபவர்கள் இந்த தலைமுறை
நெல்லை அண்ணாச்சி
700 அதிகமான விவசாயிகளை
பலி கொடுத்தபிறகும் நம்பிக்கை…
….நம்பிட்டோம்…. # ஹரியானா..
ச ப் பா ணி
நமக்குத்தான்
அது வெள்ளை வேட்டி..
மனைவியின் பார்வையில்
அது இட்லித்துணியே
கோழியின் கிறுக்கல்!!
‘அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு, இவனோட தில்லு பொய்க்காது’ன்னு கெத்தா சுத்திட்டு இருக்கிற பசங்களை,
‘எங்கே செல்லும் இந்த பாதை’ன்னு மாற்றிடுது இந்த கல்யாணம்!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இல்ல.. இந்த படத்துக்காக ஒருத்தன் தன்னோட படத்தை ரிலீஸ் பண்ணாம தள்ளி போட்டானே, அந்த புத்திசாலியை தேடிட்டு இருக்கேன்..
அவன் கிடைக்க மாட்டான்..
கோழியின் கிறுக்கல்!!
மாவு கொஞ்சமா புளிச்சு இருந்தா தான் இட்லி தோசை நல்லா இருக்கும்,
அதே மாதிரி தான் வாழ்க்கையும்!!
லாக் ஆஃப்
ஓபிஎஸ் முதல் விஜய் மனைவி சங்கீதா வரை… முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி!
தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானம் : ராமதாஸ் ஐடியா!