நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…
மாஸ்டர் கிட்ட இரண்டு ஸ்ட்ராங் டீ ஆர்டர் பண்ணிட்டு இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பர், ”விஷயம் தெரியுமா… இந்தியன் பார்ட் 3 படத்தை டெரக்டா நெட்பிளிக்ஸ்ல ரிலீஸ் பண்ணப் போறங்களாம். தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலையாம்னு” சொன்னாப்ல…
”நல்லவேளை நண்பா… மூணாவது பார்ட்டையும் ரிலீஸ் பண்ணி யாரையும் கதற விடாத வர நல்லதுன்னு” அவருக்கிட்ட சொன்னேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
மக்கள் நலனில் அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்….
அன்புமணி ராமதாஸ்..
அது ….கிடக்கட்டும் கழுத… மருத்துவக் கல்லூரி ” அனுமதி ” விவகாரம் என்னாச்சி…!!!?

Mannar & company
தங்கம் விலை உயர்ந்தால்கூட கவலைப்படாத தாய்மார்கள் தக்காளி விலை உயர்ந்தால் பெரிய அளவில் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்!!

ச ப் பா ணி
Bank ல் cash counter ஐ விட லோன் செக்சனில் தான் அதிக கூட்டம் அள்ளுது

✒️Writer SJB✒️
எப்படா தீபாவளி வரும் என்று மகிழ்ந்தால் நீங்கள் மகன்,,
ஐயோ தீபாவளி வருதே என்று பயந்தால் நீங்கள் தந்தை,,
கடைநிலை ஊழியன்
என்ன சார் மாநாடு பந்தக்கால் நட்ட போகலயா.. ?
அதுவா முக்கியம்.. இது தான சார் முக்கியம்..

நெல்லை அண்ணாச்சி
மருத்துவர்கள் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றியது அந்த காலம்…
தங்கள் ” உயிரையே ” காப்பாற்ற வேண்டியது இந்த காலம்…!!!!

கோழியின் கிறுக்கல்!!
ஒருவரைப் பற்றி புரியாமல் பிரிந்தவரை விட,
‘உன்னைப் பற்றி நல்லா புரிஞ்சிடுச்சு’ என்று பிரிபவரே அதிகம்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
வேட்டையனுக்கு சிக்கல்… போர்க்கொடித் தூக்கும் விநியோகஸ்தர்கள்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்… எப்போது தெரியுமா?
