இவங்க அலப்பறை தாங்க முடியல… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு காலையில வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன். நம்ம தவெக நிர்வாகி நண்பர் ஒருத்தர் விஜய் மாநாடு சம்பந்தமா ஸ்டேட்டஸ் போட்ருந்தாப்ல.

“என்ன நண்பா கட்சி பணிகள்ளாம் எப்படி போகுது? மாநாட்டுக்கு ஆபிஸ்ல லீவ் கொடுத்துட்டாங்களான்னு” கேட்டேன்.

ADVERTISEMENT

“அட நீ வேற நண்பா… மாநாடு போறதுக்கு ஓனர்கிட்ட இரண்டு நாள் லீவ் கேட்டேன். தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு.  வேலையே வேண்டாம்னு ரிசைன் பண்ணிட்டேன்னு” சொன்னான்..

எனக்கு ஷாக் ஆகியிருச்சு… “என்னடா சொல்றன்னு” கேட்டேன்.

ADVERTISEMENT

நம்ம புஸ்ஸி ஆனந்த் ஐயா பேசுன ஒரு வீடியோவ அனுப்பி வச்சான். அந்த வீடியோவுல, “வேலையே போனாலும் நீங்க விஜய்ய பார்க்க மாநாட்டுக்கு வரணும்னு” அவரு பேசிக்கிட்டு இருக்காரு…

இதை பார்த்துட்டு “சூப்பர் நண்பா மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்னு” மெசேஜ் அனுப்புனேன்…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company™
‘க்ளீன் இந்தியா திட்டம்’
மனிதர்களை விட
“மணி பர்ஸ்”களுக்கு நன்றாக அறிமுகம் ஆகி இருக்கிறது!!
#மாசக்கடைசி

செங்காந்தள்
லட்டு விவகாரத்தில்அவசரம் ஏன்? – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
லட்டு தின்ற ஆசைப்பட்டு கொட்டு தின்றது தான் மிச்சம்

சரண்யா
வாழ்க்கை ல Debit னு ஒன்னு இருந்தா..
Credit ஒன்னு னு இருக்குமா.. ????
அதான் இல்ல…Only Debit மட்டும் தான்..

தர்மஅடி தர்மலிங்கம்
“அ.தி.மு.க.வில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” -எடப்பாடி பழனிசாமி!
ஆமாமா… அப்படி இணைச்சுட்டா அதிமுகவுல உங்க பேச்சுக்கே இடமில்லாம போயிடுமே.?!

ச ப் பா ணி
புரியாத மாதிரி பேசறவங்க..
நமக்கு புடிக்காத மாதிரியேதான் பேசுவாங்க

தர்மஅடி தர்மலிங்கம்
“திமுக-விசிக கூட்டணியில் ‘விரிசல்’ இல்லை” – திருமாவளவன்
அப்போ… லைட்டா திமுக-விசிக கூட்டணியில் ‘ஒரசல்’ மட்டும் தான் இருக்கு போல.?!

செங்காந்தள்
வேடிக்கை பார்க்கறவங்களுக்குத் தான் நிறைய ஐடியாக்களும், குறைகளும் தெரியும்.!!!

Sasikumar J
~ எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் அப்படின்னு சொல்லுவாங்க…!
~ ஆனா சம்பளம் ஒரு நாள் லேட்டா வந்தா துடிச்சு போயிடுவாங்க சார்..!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

கொடுமை தாங்க முடியாமல் ஜெயம் ரவி பிரிந்தாரா? – மெளனம் கலைத்த ஆர்த்தி

செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் – போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?: ஈபிஎஸ் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share