இன்னைக்கு ஆபிஸ்ல ஃப்ரெண்டு ஒருத்தன்கூட பேசிக்கிட்டு இருந்தேன்.
“மச்சான்… தளபதியோட கடைசி படம் இதுதான்டா. அதுக்கப்புறம் படமே நடிக்க மாட்டாரு. ரொம்ப வருத்தமா இருக்குடான்னு” பொளம்பிக்கிட்டு இருந்தான்.
“கவலைப்படாதடா… இப்படி தான் கமலும் சொல்லிக்கிட்டு இருந்தாரு. அப்புறம் எலெக்ஷனுக்கு அப்புறம் நடிக்க போய்ட்டாரு. அதனால மனச தளரவிடாத நம்பிக்கையா இருன்னு” சொன்னேன்.
அப்படியே கோவமா என்னை பார்த்து ஒரு லுக்கு விட்டான். நான் அங்க இருந்து நைசா கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
தமிழ்நாட்டில் பி.எச்.டி. படிப்பின்
” தரம் ” திருப்தியாக இல்லை,.!
ஆளுநர் ஆதங்கம்..! # so…புதிய கல்வித்திட்டம்…!!!
கடைநிலை ஊழியன்
படத்துல ஒரே ஒரு குறை தான்..
விஜய் வசந்த் மட்டும் இல்ல..
#GOAT
ச ப் பா ணி
கஷ்டத்தில் நொந்து நூலாயிருக்கும் போது..
உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்னு யாராவது சொல்லும்போது
Sasikumar J
சிதறி கிடக்கும் தானியங்கள் தான் சிறகடித்து பறக்கும் பறவைகளுக்கு உணவு…!
கடைநிலை ஊழியன்
சனிக்கிழமை நைட்டு ஊரெல்லாம் சுத்திட்டு, நைட் 2 மணிக்கு தில்லா வீட்டுக்கு வரன் பாரு..
அவன் தான்டா இளந்தாரி பையன்..
கோழியின் கிறுக்கல்!!
‘Red velvet cake’ என்பார்,
‘Cherry Cake’ என்பார்,
“Cream bun” ருசி அறியாதார்!!
படித்ததில் பிடித்தது
கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள்
பேச்சுத் துணைக்கு சில நண்பர்கள் வேண்டும்
பேசும்போது பேசாமல் இருக்க சில நண்பர்கள் வேண்டும்
துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள சில நண்பர்கள் வேண்டும்
தூங்கும் போதும் காத்திருக்க நல்ல சில நண்பர்கள் வேண்டும்
நடைபயிற்சிக்குதுணையாக சில நண்பர்கள் வேண்டும்
நல்லது கெட்டது சொல்ல சில நண்பர்கள் வேண்டும்
பயணங்களின் போது பேசி மகிழ சில நண்பர்கள் வேண்டும்
படித்ததில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் வேண்டும்
அறிவுரை சொல்ல சில நண்பர்கள் வேண்டும்
அன்பே உருவான சில நண்பர்கள் வேண்டும்
ஆற்றல் நிறைந்த சில நண்பர்கள் வேண்டும்
ஆலயங்களுக்கு செல்ல சில நண்பர்கள் வேண்டும்
அடித்து திருத்த சில நண்பர்கள் வேண்டும்
அணைத்துக் கொள்ள சில நண்பர்கள் வேண்டும்
குடும்ப உறவாக சில நண்பர்கள் வேண்டும்
குதூகலமாய் இருக்க சில நண்பர்கள் வேண்டும்
கொடுப்பதற்கு சில நண்பர்கள் வேண்டும்
கேட்பதற்கு _சில நண்பர்கள் வேண்டும்
தடுத்து நிறுத்த சில நண்பர்கள் வேண்டும்
தட்டிக்கொடுக்க சில நண்பர்கள் வேண்டும்
புகழ்ந்து பேச சில நண்பர்கள் வேண்டும்
புரட்சிகள் செய்யும் சில நண்பர்கள் வேண்டும்
பொறுமை மிகுந்த சில நண்பர்கள் வேண்டும்
பொறுப்பான சில நண்பர்கள் வேண்டும்
புண்ணியம் செய்கின்ற சில நண்பர்கள் வேண்டும்
புறம் பேசாத நண்பர்கள் வேண்டும்
படைத்தலைவன் போல் சில நண்பர்கள் வேண்டும்
படித்ததை சொல்ல சில நண்பர்கள் வேண்டும்
பாசத்தை கொட்ட சில நண்பர்கள் வேண்டும்
பக்குவமாய் எடுத்துச் சொல்ல சில நண்பர்கள் வேண்டும்
ஓடி விளையாட சில நண்பர்கள் வேண்டும்
உதவி என்றால் ஓடோடி வர சில நண்பர்கள் வேண்டும்
உயிருக்கு உயிராய பழகிட சில நண்பர்கள் வேண்டும்
இவை அனைத்தும் கலந்த ஒரு நண்பன் எப்போதும் உடன் வேண்டும்
அது யார் என்று நீங்கள் அறிய வேண்டும்
அந்த நட்பை எந்நாளும் போற்றி தொடர்ந்திட வேண்டும்????
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
ஹோட்டல் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால்… : விக்கிரமராஜா எச்சரிக்கை!
அவரும் டென்ஷன் பார்ட்டிதான்- தோனி ரகசியம் பகிர்ந்த பத்ரிநாத்!