பரம்பொருளைத் தவிர வேறு சில பொருள்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கி சாயந்தரம் வாக்கிங் போறப்ப, மகாவிஷ்ணுவோட  சீடர் ஒருத்தரை பாத்தேன். நமக்குத் தெரிஞ்சவர்தான்…. ‘என்ன சார் இது… சிங்கப்பூர், ஆஸ்திரேலியானு சுத்தினவரை சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன், திருப்பூர்னு கூட்டிக்கிட்டு போயிட்டிருக்காங்க… ‘திருப்பூர்ல ரெய்டு நடத்தினாங்களே, என்ன பிடிச்சாங்களாம்? உங்களுக்குத் தெரியுமா?’னு என்கிட்ட கொக்கி போட்டாரு.

நான் சும்மா இருப்பேனா, ‘பரம்பொருளைத் தவிர வேற சில முக்கியமான பொருள் மாட்டிருக்குதாம்’னு சொன்னவுடனே அந்த சீடர் அப்படியே பறந்துட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

mohanram.ko
‘முதல்ல, நம்மளை நாம பார்த்துக்கணும், அப்புறம் தான் அடுத்தவர்களை… ‘என்பதை சொல்வதுதான் ‘செல்ஃபி’

கடைநிலை ஊழியன்
iphone 16 வாங்கணும்.. bank acount ல எவ்ளோ amount இருக்கு..
5,000 ரூபாய்..
50,000 ரூபாய் இருந்தாலே பத்தாதே டா..

ச ப் பா ணி
குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில் சேஸ் செய்து ஏற்றும் போது..நமக்குள் இருக்கும் தெறி விஜய் வெளிப்படுகிறார்

தர்மஅடி தர்மலிங்கம்
“முதல்வர் ஸ்டாலின் அரசு பணத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்” – சொல்கிறார் ஹெச்.ராஜா!
அதாவது நம்ம மோடி ஜி மாதிரின்னு சொல்றாரோ.?!

black cat ????‍⬛
When I’m thinking to settle in India
My bank account – இன்னும் 5 வருசம் ஆகும் கடன் அடைக்க

mohanram.ko
மீனவர்கள தொடாம இருக்க என்ன திட்டம் வச்சுருக்கீங்க?
சிம்பிள்.. மீனவர்களை கடலுக்கே போக க்கூடாதுன்னு சொல்லிடுவேன்

சரவணன். ????
வாட்டர் பாக்கெட் மூஞ்சி பாட்டு ரிப்பீட்டா ஓடிக்கிட்டு இருக்கு..
மியூசிக் சேனலா மாப்ள?
மியூசிக் சேனலா.. பிள்ளையார் சிலை பக்கத்துல இருக்குற மைக் செட்ல மாமா..

கோழியின் கிறுக்கல்!!
உங்களுக்கு கொம்பு முளைப்பது போல தோன்றினால், நீங்களே வெட்டிக் கொள்ளுங்கள்,
வேறெவரும் வெட்டி விட்டால் வலியும் வேதனையும் பன்மடங்காக இருக்கும்!!

Image

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

லாக் ஆப்

டிஜிட்டல் திண்ணை: கூட்டணிப் பிரச்சினை… கோவாவில் இருந்த வேலு அவசரமாய் போன் போட்ட திருமா

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வழக்கு : காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share