இன்னைக்கு டீக்கடைக்கு போறேன்… மஞ்ச சேலைய கட்டிக்கிட்டு ஒரு கூட்டம் போய்க்கிட்டு இருந்துச்சு…
பக்கத்துல இருந்த நண்பன் ட… “என்னடா ஆடி மாசம் தான் முடிஞ்சிருச்சே… ஏன் இப்படி மஞ்ச சேலையா போறாங்கனு கேட்டேன்.
அதுக்கு அவன், அட இதுக்கெல்லாம் காரணம் அந்த கோட் படம் தான்பா… அதுல த்ரிஷா மஞ்ச சேல ஆடுனத பாத்துட்டு டிஎல் ல புல்லா… ’எங்கடா அந்த மஞ்ச சேல’ தான் டிரெண்டிங்ல இருக்கு.
இது ஆடி மாசாத்தால வரல… த்ரிஷா ஆடுனதால வந்துச்சி… இப்போ என் ஆளும் ரீல்ஸ் போட மஞ்ச சேல கேட்டுருக்கா… கடைக்கு தான் போறேன்னு கெளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
ச ப் பா ணி
கன்னியின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால்.. அந்த பொருளை வாங்கியே ஆகனும்
#டி மார்ட் கொடுமைகள்
கோழியின் கிறுக்கல்!!
செருப்பை தவிர மற்ற எல்லாவற்றையும் வைப்பதற்காக வாங்கப் படுவதே,
செருப்பு ஸ்டாண்ட்!!
Mannar & company™
காதலில் வெற்றியை சந்தித்தவன் இதயம் பூவைப் போல மென்மையானது ஆனால்,
கல்யாணத்தில் தோல்வியை சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ரெண்டு ஆப்பிள் வாங்கிட்டேன் மாமா..
இன்னும் புக்கிங் ஆரம்பிக்கவே இல்லையாம், அப்புறம் எப்படி மாப்ள வாங்குன..?
புக்கிங்கா..? ஆப்பிள் வாங்க எதுக்கு மாமா புக்கிங் பண்ணனும்..? பழமுதிர் நிலையம்ல கூட்டமே இல்லை மாமா..
கோழியின் கிறுக்கல்!!
சமீப காலங்களில் ஊடகங்கள் செய்த ஆகப்பெரும் செய்கை,
“மூடநம்பிக்கை பேச்சாளர் ” என்ற சொற்றொடரை கண்டுபிடித்தது தான்!
தர்மஅடி தர்மலிங்கம்
“முதல்வர் ஸ்டாலின் அரசு பணத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்” – சொல்கிறார் ஹெச்.ராஜா!
அதாவது நம்ம மோடி ஜி மாதிரின்னு சொல்றாரோ.?!
காமெடி சிரிப்பு நிச்சயம்.
இந்நேரம் மந்திரத்தை போட்டு போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து தப்பிச்சு போய்ருப்பான்ல?
ச ப் பா ணி
நைட் பேண்ட்டுக்கு கொடுக்கும் கெளரவத்தைக் கூட..
நைட்டிக்கு கொடுப்பதில்லை
சமூகம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இமானுவேல் சேகரன் நினைவு தினம்… தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?