இன்னைக்கு நாம் தமிழர் தம்பி ஒருத்தரை ஆபிஸ் வர்ற வழியில சந்திச்சேன்.
“என்னடா கட்சி பணிகள்லாம் எப்படி போகுதுன்னு” கேட்டேன்.
“அதெல்லாம் சிறப்பா போகுது. இங்க பாருங்க தமிழ்நாடு சிஎம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் போறாரு. பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் போறாரு. எங்க அண்ணன் மட்டும் தான் தமிழ்நாடு மக்கள் நலன் கருதி தேர்தல் முடிஞ்ச பிறகு தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போறாருன்னு” சொன்னான்.
“டேய்… உங்க அண்ணனும் போக வேண்டியது தானடான்னு” சொன்னேன்.
“இல்லை இல்லை… அவங்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை. எங்க அண்ணனுக்கு மட்டும் தான் அக்கறைன்னு” பேசிக்கிட்டு இருந்தான்.
“சரிடா நான் கிளம்புறேன்னு” சொல்லிட்டு அவன்கிட்ட இருந்து தப்பிச்சி வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் – செய்தி
விடுப்பா விடுப்பா பரப்பனஅக்ரஹார சிறை ன்னா
சொகுசா இருக்குறதும் ஷாப்பிங் போறதும் சகஜம் தான
நெல்லை அண்ணாச்சி
நடிகர் விஜய் கட்சி
தொடங்கியதற்கு ராகுல்காந்திதான் காரணம். ….விஜயதரணி..!!!
# இன்னமும்… இங்கனதான் சுத்திகிட்டு் இருக்கியா.தாயி..!
ச ப் பா ணி
எங்க சுத்தினாலும் வீட்டுக்குத் தான் வரனும் என்பதின் இங்கிலீஸ் வெர்சன் தான்
Direct to home-DTH
செங்காந்தள்
பாடல் வரிகள் தெரியாத போது சமாளிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது ஹம்மிங்…!!!
ச ப் பா ணி
கடன் கொடுத்த நண்பர்கள் நண்பர்களாகவே தொடருகின்றனர்.
கடன் வாங்கிய நண்பர்களே நம்பர்களாகிப் போய்விடுகின்றனர்.
balebalu
நெடுஞ்சாலை கொள்ளை என்பது
வழிப்பறி திருட்டு மட்டும் அல்ல
அடிக்கடி உயரும் டோல் கேட் கட்டணமும் தான்
ச ப் பா ணி
பாஜக-வில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்’ – தேதியை அறிவித்த பாஜக!
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
கோழியின் கிறுக்கல்!!
பயன்படுத்தப்படுவதை விட கொடுமையானது,
பயன்படுத்தப்படுகிறோம் என்பதை உணராமல் இருப்பது!
Writer SJB
இப்படி நீயே தினமும் சமைச்சு சாப்பிடுறியே பேசாம ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல..?
எதுக்கு அவளுக்கும் சேர்த்து சமைச்சு போடவா…?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
முருகன் மாநாடு: அறநிலையத்துறை பணிகளில் அதிக ஆர்வம் வேண்டாம்.. சேகர்பாபுவை விமர்சித்த கி.வீரமணி