சத்ரபதி சிவாஜி சிலைக்கு மோடி கேரண்டி… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.

மாஸ்டர் கிட்ட ஒரு ஸ்ட்ராங் டீ, ஒரு பிளாக் டீ ஆர்டர் பண்ணிட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.

நண்பர், ”போன வருசம் டிசம்பர் மாசம் பிரதமர் மோடி மகாராஷ்டிராவுல திறந்து வச்ச 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் சிலை இன்னைக்கு சுக்குநூறா உடைஞ்சிருக்கு செய்தி பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல…

”ஆமா நண்பா… மகாராஷ்டிரா மாநிலத்துல விரைவிலேயே தேர்தல் வர இருக்கு. இதை சாக்கா வச்சி நம்ம மோடி ஐயா, மீண்டும் நாங்க ஆட்சிக்கு வந்தா 50 அடி உயர பிரம்மாண்ட சிலை அமைப்போம்னு கேரண்டி கொடுப்பாரு. அதுக்கு செம சான்ஸ்னு” சொன்னேன்.

”ஆமாமா… மோடி கேரண்டி கொடுக்க செம சான்ஸ்னு” அவரும் சொன்னாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

செங்காந்தள்
பஸ்,ரயில் உட்பட எந்த வாகனங்களின் படிகளிலும் தொங்காதீர்கள்.அது நீங்கள் வீட்டில் போட்டோவில் தொங்குவதற்கான ஒத்திகையாகவும் இருக்கக்கூடும்…!!!

ச ப் பா ணி
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அவனையே ஓயாமல் வேலை செய்ய வைப்பது பெண்களின் செயல்

நெல்லை அண்ணாச்சி
முதல்வரிடம் “கலைஞர் நாணயம் ”
வாங்கிய கமல்ஹாசன்..
# அப்படியே ..அந்த MP சீட்…!!!

Mannar & company™
தரைல காலடி தடத்தை பதிச்சி பூஜை பண்றதும்,
Mop போட்டுகிட்டு இருக்கும்போது தரைல காலடி தடத்தை பார்த்துட்டு திட்றதும் ஒரே ஆளா..!?
#கிருஷ்ண_ஜெயந்தி

Mannar & company™
ஏன்ணே அழுவுறீங்க ‘வாழை’ படத்தை நினைச்சா..!?
நான் என் “வாழ்க்கை”யை நினைச்சி அழுவுறேன்யா!

ச ப் பா ணி
சகிப்புத் தன்மை என்பது பிடித்த ஒரு விஷயத்துக்காக..
பிடிக்காத ஒன்பது விஷயத்தை பொறுத்துக் கொள்வதே

மாஸ்டர் பீஸ
வலிக்குதுனு சொல்றவங்கள்ட போய் இதெல்லாம் ஒரு வலியா எனக்கு இருந்துச்சு பாரு ஒரு காயம்னு பேசறது ஆறுதல் இல்ல அரைவேக்காட்டுத்தனம்!!!

கோழியின் கிறுக்கல்!!
இலையுதிர் காலத்தை ஏற்றுக் கொள்ள தயங்குபவன்,
வசந்த காலத்தை கொண்டாட தகுதியற்றவன்!!

வசந்த்
சார் என்னோட பையன காணும் சார்
போலீஸ் ~ எம்மா இன்னைக்கு எல்லா குழந்தையும் மாறு வேஷத்தில் இருப்பாங்க உங்க வீட்டுல தான் இருப்பான் நல்லா தேடி பாரும்மா.
#கிருஷ்ண_ஜெயந்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

“வாக்குக்காக அண்ணாமலை இப்படி பேசுகிறார்”: முத்தரசன் காட்டம்!

சுங்கச் சாவடி கட்டண உயர்வு… மத்திய அரசுக்கு அன்புமணி, டிடிவி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share