குறுக்கே இந்த கெளசிக் வந்தா… அப்டேட் குமாரு!

Published On:

| By Kavi

இன்னைக்கு கோயம்புத்தூருக்கு வந்த நிதியமைச்சர்… தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டாங்க…

மத்திய அரசின் கடன் நலத்திட்டங்களை அவரு பேசிக்கிட்டு இருக்கும்போதே… ‘குறுக்கே இந்த கெளசிக் வந்தா’ங்கிற ரேஞ்சில தனக்கு கடன்  மறுக்கப்படுவதாக ஒருத்தர் குற்றஞ்சாட்ட…  ’அங்க இருந்து என்ன சொல்றீங்க… மேடைல வந்து சொல்லுங்க’ன்னு நிதியமைச்சர் சொன்னாங்க…

ADVERTISEMENT

அவரும் உடனே பாஸ் என்ற பாஸ்கரன்ல வர சந்தானம் மாதிரி படார்னு மேடையேறி தன்னோட கஷ்டத்த சொல்ல…

அதுக்கு நிதியமைச்சர் தீர்வு சொல்லுவாங்கன்னு பாத்தா… தலைநகரம் வடிவேலுவா மாறி ’உங்க புகார அப்படியே எழுதி கொடுங்க’ன்னு அடுத்த அசைமெண்ட்டுக்கு மூவ் ஆனாங்க பாருங்க… அதோட புகார் கொடுத்தவரும் அங்கிருந்து மூவ் ஆகிட்டாரு…

ADVERTISEMENT

என்ன நடந்தாலும் சரி… கூடிய சீக்கிரத்துல அந்த தொழில்முனைவரோட புகாரும் மூவ் ஆகி கடன் கிடைச்சா சந்தோசம் தான்…

நீங்க அப்டேட் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
சத்திஸ்கரில் 26000 கோடி திட்டங்கள்… மோடிஜி
-750000 கோடி ஊழல் பற்றி ஏதாவது தகவல் உண்டா..!?..ஜி

ADVERTISEMENT

ச ப் பா ணி
மடியில பவர் பேங்க் இருந்தால்
வழியில பயம் இருக்காது

நாகராஜா சோழன் MA MLA
தியேட்டர் ஓனர் ~ கேன்டீன் ல விக்கர பாப்கார்ன் ஐஸ் கிரீம் விலையை அதிகம் ஆக்கிட்ட
டிக்கெட் விலை கம்மியா தானே தெரியும்

கடைநிலை ஊழியன்
ஏன் சார் அழுகுறீங்க.. road full ல traffic ‘க்கா இருக்கு வேகமா போக முடியல னு அழுகுறீங்களா.. ?
இல்ல சார்.. லீவ் முடிஞ்சு ஆபீஸ் போயிட்டு இருக்கேன்.. அத நினைச்சு தான் அழுகுறேன்..
இப்ப எனக்கும் அழுகை வருது சார்..

balebalu
கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம் – தெலங்கானாவில் பிரதமர் பேச்சு
அப்போ அதுவும் அதானி கட்டுப்பாட்டில் வைக்கணுமோ

 

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் இன்னமும் உள்ளனர் – டிடிவி.தினகரன்
-இன்னமும் அதே ஸ்லீப்பர் செல்லா..?

கோழியின் கிறுக்கல்!!
நாம லீவு போட்டால் ஜாலி,
ஆனா நம்ம பாஸ் லீவு போட்டால் ஜாலிலோ ஜிம்கானா!!

balebalu
‘அகழ்வாரை தாங்கும் நிலம்’ ன்னா அது நிச்சயமா ‘பெருங்களத்தூரை சுற்றியுள்ள GST Road ‘ பகுதியாத்தான் இருக்கும்
ஒவ்வொரு விடுமுறைக்கும் எத்தனை எத்தனை மனிதர்களையும் , வாகனங்களையும் தாங்குகிறது

லாக் ஆப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாரிமுத்துவை தொடர்ந்து டைமிங்கும் மாற்றம்: எகிறும் எதிர்நீச்சல் சீரியல்!

ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு ஜாமீன்: நிபந்தனை என்ன?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share